Featuredதமிழீழம்

வான் புலிகளின் வீரமும் தலைவரின் சாணக்கியமும்..

2007-ம் ஆண்டு மார்ச் 25-ம் திகதி அதிகாலை.

கட்டுநாயக்கா விமானப்படை தளத்தின்மீது விடுதலைப்புலிகளின் முதலாவது விமானத்தாக்குதல் நடந்தது. புலிகளின் இரண்டு சிறிய விமானங்கள் கட்டுநாயக்க விமானப்படை முகாம் வான்பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தன.அப்பொழுது இலங்கை வான்படையின் பயன்பாட்டில் இருந்தது இந்திய ராடர்கள். புலிகளின் விமானங்கள் வந்த விவகாரம் இந்திய ராடர்களிற்கு தெரிந்திருக்கவேயில்லை.

புலிகளின் விமானங்கள் குண்டுவீசியதையடுத்து, இருண்ட வானத்தை நோக்கி விமானப்படையினர் துப்பாக்கிகளால் சுட்டார்கள். சாதாரண துப்பாக்கிகள், கலிபர்கள் கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். இரவு நேரமாகையால் விமானத்தை அடையாளம் கண்டு தாக்குதல் நடத்த முடியவில்லை.

வான்புலிகளிற்கும் குண்டுவீசுவதல் சிக்கல்கள் இருந்தன. அவர்களிற்கு இது முதலாவது தாக்குதல். வன்னியிலிருந்து நீண்டதூரம் பயணித்து வந்து தாக்கும் பதட்டம், இலக்கை துல்லியமாக அடையாளம் காணும் தொழில்நுட்ப வசதிகள் இல்லாமை போன்ற காரணங்களால் அவர்களிற்கும் விமானங்கள் தரித்து நிற்கும் பகுதியை அடையாளம் காண்பதில் சிக்கலிருந்தது.

வான்புலிகளின் அந்த இரண்டு விமானங்களையும் ஓட்டியவர்கள் கரன், சிரித்திரன். இவர்கள் இருவரும் கடைசியாக கொழும்பில் தாக்குதல் நடத்த முயன்றபோது, 2009 இல் உயிரிழந்திருந்தனர். அதுதான் புலிகளின் கடைசி வான் தாக்குதல்.

விடுதலைப்புலிகளின் கேப்பாபிலவு ஓடுதளத்தில் பிரபாகரனும் தளபதிகளும் விடுதலைப்புலிகள் ஒரு விமானம் வீசிய இரண்டு குண்டுகள் விமானப்படை பொறியியல் பீடத்தின் கட்டிடத்தின் மீது விழுந்தது. மற்றைய விமானம் வீசிய இரண்டு குண்டுகளும் ஹெலிகொப்டர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹங்கரின் மீது விழுந்தது. இதில் 3 விமானப்படையினர் கொல்லப்பட்டனர். சிலர் காயமடைந்தனர். விமானத்தளத்தின் கட்டிடங்களிற்கு சேதம் ஏற்பட்டதே தவிர, விமானங்களிற்கோ, ஹெலிகொப்டர்களிற்கோ சேதம் ஏற்படவில்லை.

இந்த தாக்குதலின் பின் புலிகளின் இரண்டு விமானங்களும் பத்திரமாக வன்னியில் வந்து தரையிறங்கி விட்டன. புலிகளின் விமானம் பாதி தூரம் வந்ததன் பின்னர்தான் இலங்கை விமானப்படை மிகையொலி விமானங்களான கிபிர் விமானங்கள் விரட்ட தொடங்கின. ஆனால் புலிகளின் விமானங்கள் பத்திரமாக புதுக்குடியிருப்பில் தரையிறங்கி விட்டன.

புலிகளின் விமானங்கள் எந்த ரகம் என்று இலங்கை விமானப்படையினரால் அடையாளம் காண முடியவில்லை. மறுநாள் புலிகள் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர். அப்பொழுதுதான் புலிகளிடம் என்ன விமானம் இருக்கிறதென்பது உலகத்திற்கு தெரிய வந்தது. தாக்குதலிற்கு உபயோகித்த விமானத்தின் படத்தையே வெளியிட்டு கெத்து காட்டியிருந்தனர் புலிகள்.

புலிகள் உருவாக்கிய Electrical Bomb Release சிஸ்டம்புலிகள் காண்பித்த விமான ரகங்கள் குண்டுவீச்சிற்குரியவை அல்ல. அவற்றை தயாரிக்கும் நிறுவனங்களால் EBR (Electrical Bomb Release) வசதி அமைக்கப்படுவதில்லை. புலிகள் பின்னர் விமானங்களில் EBR சிஸ்டத்தை அமைத்து, குண்டு வீச்சு விமானங்களாக மாற்றியிருந்தனர்.

புலிகளின் வான்படை பற்றிய ஆராய்ச்சியில் மொத்த உலகமும் இறங்கியிருக்க, வான்படையினர் வேறு ஒரு ஆய்வில் இறங்கினர். புலிகளின் விமானங்கள் எந்த வழியால் கொழும்புக்கு வந்தன என்பதை கண்டறிய வேண்டும். அந்த பாதையை அறிந்தால் போதும். மீண்டும் வரும்போது இலகுவாக குறிவைக்கலாம். எதிர்பாராத விதமாக திடீரென வந்துவிட்டாலும், திரும்பி போகும்போது தாக்கலலாம்.

புலிகளின் சிறிய, வேகம் குறைந்த விமானங்கள் இலங்கையின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஈடுகொடுக்க முடியாதவை. இது புலிகளிற்கும் தெரியும். நன்றாக கவனித்தவர்களிற்கு புரியும், ஒருமுறை தாக்குதல் நடத்திய இடத்தில் புலிகள் இரண்டாவது முறை தாக்குதல் நடத்தியதில்லை. புதிய புதிய இலக்குகளைதான் தாக்கினார்கள். ஒருமுறை கொழும்பை தாக்கினால் அடுத்தமுறை அதற்கு நேர் எதிர்திசையில் பலாலியில் தாக்குதல் நடத்தினார்கள். அடுத்தமுறை திருகோணமலையில் தாக்குதல் நடத்தினார்கள். இப்படியே போக்குகாட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், யுத்தத்தின் இறுதி சமயத்தில் மீண்டும் கொழும்பிற்கு வந்தார்கள். அதாவது முதல் தாக்குதல் நடத்திய இடத்திற்கு. தம்மிடமிருந்த விமானங்களை வைத்து ஏதாவது அழிவை ஏற்படுத்த வேண்டுமென திட்டமிட்டதால் இந்த தாக்குதல் முயற்சியை மேற்கொண்டார்கள். இந்த சமயத்தில்தான் இரண்டு விமானங்களும் வீழ்த்தப்பட்டன.

அதாவது புலிகளிற்காக காத்திருந்த அரசின் பொறிக்குள் இரண்டு விமானங்களும் விழுந்தன. அது எப்படி?

விமான பயணங்கள் திட்டமிடப்படுவது முழுக்க முழுக்க பிளைட் பிளான் (Flight Plan) அடிப்படையில். இதை இரண்டு வழியில் உருவாக்குகிறார்கள். ஒன்று manual flight plan. அதாவது மனிதர்களின் மூளையை வைத்து உருவாக்கப்படுவது. அடுத்தது கணினி மூலம் உருவாக்குகிறார்கள். இப்பொழுது வர்த்தக விமானங்கள் அனைத்தும் கணினி மென்பொருள் மூலம் உருவாக்கப்படும் பிளானைதான் பயன்படுத்துகின்றன. (வான்புலிகள் பற்றிய தமிழ் பக்கத்தின் மினி தொடர் இது)

புலிகள் உபயோகித்தது manual flight plan.

manual flight plan பாவிப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால், இதில் அனுபவமுள்ள ஒருவரால் பயணப்பாதையை ஓரளவு ஊகிக்க முடியும். நல்ல தேர்ச்சியுள்ளவர்கள் என்றால் 98 சதவீதம் துல்லியமாக ஊகிப்பார்கள். இலங்கை விமானப்படையினரும் புலிகளின் பிளைட் பிளானை ஊகித்தார்கள்!

இந்த தாக்குதல்களிற்காக புலிகள் எப்படியான ரன்வேயை பயன்படுத்தியிருப்பார்கள் என பலவித ஆய்வுகள் நடந்தன. கிழக்கு – மேற்கு திசையை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட ரன்வேயாக இருக்காது. வடக்கு – தெற்கை பேஸ் ஆக வைத்தோ, வடகிழக்கு – தென்மேற்கு அல்லது வடமேற்கு – தென்கிழக்கை அடிப்படையாக வைத்து அமைக்கப்பட்ட ரன்வேயாக இருக்கும் என பலவித ஆய்வுகள் வந்தன.

ஆனால் முதல் தாக்குதலிற்காக புலிகள் அமைத்த ரன்வே ஒன்றையும் பாவிக்கவில்லையென்பதே உண்மை. இறுதியாக 2009 இல் புறப்பட்ட விமானங்கள் இரண்டும் மாத்தளன் உப்பேரி கரையிலிருந்துதான் ரேக் ஓவ் ஆகின. முதல் தாக்குதலில் விடத்தல்தீவிற்கு அண்மையாக கிறவல் பாதையொன்றில் ரேக் ஓவ் ஆகின. அங்கிருந்து சிறிய பயணப்பாதையில் மேற்கு கரையால் கடலை கடந்து கட்டுநாயக்காவை கடந்து சென்று, கட்டுநாயக்கா விமானப்படை தளத்தை கடந்து சென்று, இடதுபுறமாக வட்டமடித்து, இன்னொரு இடது வட்டமடித்து மேலும் மூன்று நிமிட பயணதூரத்தில் விமானத்தளத்தின் தலையுச்சிக்கு வந்தன.( இது தமிழ் பக்கத்தின் காப்புரிமை பெற்ற தொடர்) கட்டுநாயக்காவில் தாக்குதல் நடத்திவிட்டு, நேராக பறந்தால், கடலோரமாக பாதுகாப்பாக மன்னாரிற்கு வந்து விடலாம். இடையில் உள்ள அநுராதபுரம், ஹிங்குராங்கொட, சிகிரியா விமானப்படை தளங்களை கடக்க வேண்டிய அபாயமில்லை.

ராடரின் கண்ணில் மண்ணைதூவ புலிகளின் விமானங்கள் உயரம்குறைவான பறத்தலை செய்திருந்தன. தரையில் விமானத்தின் சத்தம் தெளிவாக கேட்டதாக மக்கள் சொல்ல தொடங்க, அதை வைத்து பிளைட் பிளானை கணிக்க புலனாய்வு அமைப்புக்கள் முயன்றன.

-ஹிருத்திக் போஸ் நிஹாலே-

Comment here