இராசி பலன்

இன்றைய ராசி பலன் – ஜனவரி 02,2020

மேஷம்: சிறு செயலும் கடினமாகத் தோன்றலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனை நல்வழி தரும். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் பாதுகாக்கவும். பணவரவு சீராக கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.

ரிஷபம் : கடந்த கால உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் செயல் திறனை, பிறர் பாராட்டுவர். தொழில், வியாபாரம் செழிக்கும், வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத் தேவையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

மிதுனம்: நட்பின் பெருமையை உணருவீர்கள். எதிர்கால வாழ்வில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகள் பதவி உயா்வு பெறலாம்.

கடகம்: மாறுபட்ட கருத்து உள்ளவர்களிடம் பேச வேண்டாம். மனஅமைதியை பாதுகாப்பதால், செயல்கள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் உருவாகும் குளறுபடியை சரி செய்வீர்கள். சீரான பணவரவு கிடைக்கும். உறவினர் வகையில் செலவு அதிகமாகும்.

சிம்மம்: வழக்கத்திற்கு மாறான பணி தொந்தரவு தரலாம். செயல் நிறைவேற கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் அரசின் சட்டத்தினை தவறாமல் பின்பற்றவும். பணச் செலவில் சிக்கனம் தேவை. பெண்கள் நகையை இரவலாக கொடுக்கக்கூடாது.

கன்னி: எதிர்பார்த்த காரியம் வெற்றி பெறும். நண்பரிடம் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். கூடுதல் வருமானம் கிடைக்கும். மனைவியின் அன்பினால் மகிழ்வீர்கள்.

துலாம்: செயல்களில் நியாயம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சீரான முன்னேற்றம் ஏற்படும். கூடுதல் பணவரவு கிடைக்கும். ஊட்டச்சத்து உணவினை உண்டு மகிழ்வீர்கள்.

விருச்சிகம்: கடந்த கால சிரமத்தை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக உழைப்பால் பணி இலக்கு நிறைவேறும். சீரான பணவரவு கிடைக்கும் . ஒவ்வாத உணவினை உண்ண வேண்டாம். வெளியூர் பயணத்தில் மாற்றம் ஏற்படும்.

தனுசு: மனதில் அடுத்தவர் மீதான நம்பிக்கை குறையும். பணிகளை பொறுப்புடன் நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உள்ள மந்தநிலை மாறும். சேமிப்பு பணம் செலவாகும். நித்திரை தாமதமாகலாம்.

மகரம்: நண்பரிடம் சொந்த விஷயங்களை பேசுவீர்கள். தீர்வுக்கான ஆலோசனை கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சி எளிதில் நிறைவேறும். பணவரவு அதிகரிக்கும். வெகுநாள் தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும்.

கும்பம்: நண்பரின் ஆலோசனை நல்வழியில் செயல்பட ஊக்கம் தரும். தொழில், வியாபாரத்தில் நிலுவைப் பணிகளை முடிப்பது அவசியம். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு வேண்டும். உணவினை தரம் அறிந்து உண்ணவும்.

மீனம்: சமூகத்தில் நல்ல மதிப்பீடு உருவாகும். நண்பரின் உதவி எளிதாக கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிப்பணி நிறைவேறும். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள். ஓய்வு நேரத்தில் இசையை ரசித்து மகிழ்வீர்கள்.

Comment here