இராசி பலன்

இந்த வார இராசி பலன்

மேஷம்: குரு, ராகு, சந்திரனால் நன்மை ஏற்படும். வாழ்வில் வளர்ச்சிப்பாதை உருவாகும். புகழ்ந்து பேசுபவர்களிடம் கவனமாக இருங்கள்.பிள்ளைகளின் அறிவாற்றல் சிறந்து, சுதந்திரமாக செயல்படுவர். பூர்வ புண்ணிய பலன் நன்மைகளை தரும். ஒவ்வாத உணவினை உண்ண வேண்டாம். மனைவியின் செயல்களில் குளறுபடி ஏற்படலாம். வெளியூர் பயணம் நன்மை தரும். தொழில், வியாபாரம் செழிக்க சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் குறிப்பிட்ட காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் நகையை இரவலாக கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். மாணவர்கள் படிப்பில் மேம்பட அதிக முயற்சி தேவைப்படும்.பரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

ரிஷபம்: சுக்கிரன், புதன், சந்திரன் அதிகளவில் நன்மை தருவர். வார்த்தையில் வசீகரம் இருக்கும். தாமதமான பணிகள் புதிய முயற்சியால் நிறைவேறும்.வீடு, வாகனத்தில் தேவையான மாற்றத்தை செய்வீர்கள். புத்திரர், பெற்றோர் சொல்லும் அறிவுரையை ஆர்வமுடன் ஏற்பர். உடல் நலம் சீராகும். நிலுவைப்பணம் வசூலாகும். மனைவி குடும்ப நலனில் அக்கறை கொள்வார். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள், நிர்வாகத்தின் வழிகாட்டுதலை தவறாமல் பின்பற்றுவர். பெண்களுக்கு, தாய் வீட்டு வழி உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர்.பரிகாரம்: குரு வழிபாடு சுபவாழ்வு தரும்.

மிதுனம்: செவ்வாய், குரு, சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளனர். நற்செயலால் நண்பர்களிடம் புகழ் பெறுவீர்கள்.தாயின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகள் வேலையில் முன்னேற்றம் காண்பர். தாரளமாக குடும்ப செலவுகளை செய்வீர்கள். விவகாரங்களில் சுமூக தீர்வு கிடைக்கும். மனைவியின் அன்பு, பாசத்தில் மனம் நெகிழ்வீர்கள். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணசேமிப்பு கூடும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்களுக்கு தெய்வ அருளால் நினைத்தது நிறைவேறும். மாணவர்கள் படிப்பில், புதிய பயிற்சி முறையை பின்பற்றுவர்.சந்திராஷ்டமம்: 29.12.19 காலை 6:00 மணி முதல் 30.12.19 காலை 10:27 மணி வரைபரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

கடகம்: சூரியன், புதன், கேது, சனீஸ்வரர் அளப்பரிய நன்மை தருவர். புதிய நம்பிக்கை உற்சாகம் தரும். பணிகளில் சிறப்பாக ஈடுபடுவீர்கள். தாராள பணச்செலவில் குடும்ப தேவை நிறைவேறும். பிள்ளைகள், பெற்றோரிடம் பாசத்துடன் நடந்து கொள்வர். வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் சொல்லும், செயலும் சிறப்பாகும். வெளியூர் பயணத்தில் இனிய அனுபவம் கிடைக்கும். தொழிலில் அளவான மூலதனம் பலன் தரும். பணியாளர்கள் சூழல் உணர்ந்து செயல்படுவர். பெண்களுக்கு, தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை வேண்டும்.சந்திராஷ்டமம்: 30.12.19 காலை 10:28 மணி முதல் 1.1.20 இரவு 9:47 மணி வரைபரிகாரம்: சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.

சிம்மம்: இராகு, குரு, சந்திரனால் ஓரளவு நன்மை உண்டாகும். புதியவர்களின் உதவி கிடைக்கும். சிக்கனம் சிரமம் தவிர்க்க உதவும். பிள்ளைகள், பெற்றோரிடம் பாசத்துடன் பழகுவர். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சத்தான உணவு உண்டு மகிழ்வீர்கள். மனைவி வழி உறவினர்களிடம் விவாதம் வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலங்களை பாதுகாக்கவும். பணியாளர் பொறுப்புணர்வுடன் பணிபுரிந்து, சலுகை பெறுவர். பெண்கள் பணம் சேமிப்பதில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் ஞாபகத்திறனால் படிப்பில் முன்னேறுவர்.சந்திராஷ்டமம் : 1.1.20 இரவு 9:48 மணி முதல் 4.1.20 காலை 9:28 மணி வரைபரிகாரம்: முருகன் வழிபாடு சகல நன்மை தரும்.

கன்னி: செவ்வாய், புதன், சுக்கிரன், சந்திரனால் நற்பலன் கிடைக்கும். பணி நேர்த்தியாக நிறைவேறும்.உறவினர்கள் அன்பு பாராட்டுவர். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். புத்திரரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சிரமங்கள் இதமான அணுகுமுறையால் விலகும். மனைவியின் நற்செயல் குடும்பத்திற்கு பெருமை சேர்க்கும். தொழில், வியாபாரம் செழித்து பணவரவு கூடும். பணியாளர்கள் கூடுதல் தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். பெண்களுக்கு தாய் வீட்டு உதவி கிடைக்கும். மாணவர்கள் படிப்புடன், கலைகளும் பயில்வர்.சந்திராஷ்டமம்: 4.1.20 காலை 9:29 மணி முதல் நாள் முழுவதும்பரிகாரம்: சிவன் வழிபாடு தொழிலில் வளர்ச்சி தரும்.

துலாம்: சூரியன், கேது, சனீஸ்வரர், சந்திரனால் ராஜயோக பலன் கிடைக்கும். உங்களின் திறனை நண்பர் உணர்ந்து பாராட்டுவர்.அரசு சார்ந்த உதவி கிடைக்கும். திட்டமிட்டபடி புதிய வாகனம் வாங்கலாம். புத்திரரின் செயல்களை பாராட்டுவீர்கள். வீட்டில் சுபநிகழ்வு நடக்கும். மனைவி குடும்ப ஒற்றுமையை பாதுகாத்திடுவார். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பணியாளர்கள் குறித்த காலத்தில் பணியைநிறைவேற்றுவர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் படிப்பில் பரிசு, பாராட்டு பெறுவர்.பரிகாரம்: நரசிம்மர் வழிபாடு சகல நன்மை தரும்.

விருச்சிகம்: குரு, சுக்கிரன், சந்திரன் அனுகூலபலன் வழங்குவர். நடைமுறை வாழ்வு சிறப்பாகும். தாயின் அன்பு ஊக்கம் தரும்.புத்திரர் பெற்றோரின் எண்ணங்களை புரிந்து கொள்வர். பூர்வீக சொத்தில் பணவரவு அதிகரிக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள். மனைவியின் ஆலோசனை ஒற்றுமையை வளர்க்கும். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவில் வளர்ச்சி பெறும். பணியாளர்கள் எதிர்பார்த்த கடன் கிடைக்கும். பெண்கள் உறவினர்களை நன்கு உபசரிப்பர். மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் வேண்டும்.பரிகாரம்: தன்வந்தரி வழிபாடு நலம் தரும்.

தனுசு: சுக்கிரன், சந்திரன் ஓரளவு நற்பலன் தருவர். புதிய திட்டம் நிறைவேற உறவினரின் உதவி கிடைக்கும்.வீடு, வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். பிள்ளைகள் எதிர்கால நலன் உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவர். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் செயல்களை பாராட்டுவீர்கள். தொழிலில் மாற்று வழியை பின்பற்றினால் வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் அதிக நிபந்தனையுடன் கடன் பெறக்கூடாது. பெண்கள் உறவினர்களை நன்கு உபசரிப்பர். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவா்.பரிகாரம்: பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

மகரம்: செவ்வாய், சுக்கிரன், ராகு, சந்திரன் வியத்தகு நற்பலன் தருவர். சுற்றுச்சூழல் உணர்ந்து பணிபுரிவீர்கள்.வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். அறிவார்ந்த செயல் புதிய நம்பிக்கையை தரும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். வெளியூர் பயணம் ஓரளவு நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து பணவரவு கூடும். பணியாளர்கள் அதிக வேலை வாய்ப்பை ஏற்றுக்கொள்வர். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவர். மாணவர்கள் நன்கு படித்து பாராட்டு பெறுவர்.பரிகாரம்: துர்க்கை வழிபாடு தைரியம் தரும்.

கும்பம்: பெரும்பான்மை கிரகங்கள் அதிர்ஷ்ட பலன் வழங்குவர். சமூகத்தில் நன்மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு திட்டமிட்டபடி நிறைவேறும்.தம்பி, தங்கையின் அன்பு நெகிழ்ச்சி தரும். புத்திரர் உற்சாகத்துடன் செயல்படுவர். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் சொல்லும், செயலும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை இனிதாக நடத்துவீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்கள் கணவரின் அன்பில் சந்தோஷமாக வாழ்வா். மாணவர்கள் ஆசிரியரின் கவனம் பெற்று படிப்பில் முன்னேறுவர்.பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றி தரும்.

மீனம்: சூரியன், புதன், சுக்கிரன் அனுகூல அமர்வில் உள்ளனர். பழகுபவர்களிடம் சூழல் உணர்ந்து பேச வேண்டும்.உடன்பிறந்தவர் சொந்த பணிகளில் கவனம் கொள்வர். அறிமுகமில்லாதவர்க்கு வாகனத்தில் இடம் தர வேண்டாம். புத்திரர் எளிமையான குணங்களுடன் செயல்படுவர். குடும்ப தேவை அதிகரிக்கும். எதிரிகள் சொந்த சிரமங்களால் விலகுவர். மனைவியின் ஜாதக யோகம் அதிர்ஷ்ட பலன்களை தரும். தொழில் வியாபாரம் செழித்து ஆதாய பணவரவு கிடைக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் படிப்புடன், கலைகளும் பயில்வர்.பரிகாரம்: சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

Comment here