Featuredஇலங்கைசெய்திகள்

தமிழ் கூட்டமைப்பு தமிழர்களுக்கான கட்சியா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை நாடாளுமன்றத்தில் வழங்கும் தேனீர் விருந்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டுமென, அந்தக்கட்சி உத்தரவிட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று கொழும்பில், இரா.சம்பந்தனிற்கு அரசாங்கம் வழங்கிய சொகுசு பங்களாவில் இடம்பெற்றது.

இன்றைய கூட்டத்திற்கு செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிவமோகன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இதனால், நாளை மீண்டும் கூடி, கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கை பற்றி ஆராய்வதென முடிவானது.

நாளை ஜனாதிபதியின் சிம்மாசன உரை முடிந்ததும், தேனீர் விருந்து வழங்கவுள்ளார். இதில் எம்.பிக்கள் கலந்து கொள்ள வேண்டுமென எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தினார்.

அத்துடன், ஜனாதிபதியின் உரையை கூட்டமைப்பு சவாலுக்குட்படுத்தாது என்றும் அறிய வருகிறது. பிறிதொரு கட்சி சவாலுக்குட்படுத்தினால், அதனை ஆதரிக்கலாம் என்று முடிவு செய்துள்ளதே தவிர, கூட்டமைப்பாக சவாலுக்குட்படுத்தாது.

Comment here