Featuredதமிழீழம்

ஜனாதிபதி பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைக்கு சென்ற போராளிகளின் கதை – மறக்கமுடியுமா?

மறக்கமுடியுமா?

மறக்க முடியாத நினைவுகள் 1989 ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் குளவி சுட்டான் கிராமத்திலுள்ள ஒரு குளத்தில் உள்ள பகுதியில் சிறிலங்கா அரசின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசா அரசோடு பேச்சுவார்த்தைக்கு செல்லும்போது குளவி சுட்டான் பகுதியில் எடுக்கப்பட்ட நிழல் படம் இந்தப்படத்தில் முன்பு செல்பவர் லெப்டினன்ட் கேணல் நரேஷ் மற்றும் கேப்டன் தீப் கப்டன் பிரகாஷ் மேஜர் தங்கேஸ் அண்ணா

மற்றும் லோரன்ஸ் போராளிகளோடு அன்று அந்த அணியில் வந்தவர்கள் யோகி அண்ணா மற்றும் போராளிகள்

அன்றைய நாள் ஸ்ரீலங்கா அரசுக்கு சொந்தமான உலங்குவானூர்தி வந்து தரையிறங்கியது.

அதில் ஸ்ரீலங்கா அரசின் அதிகாரி ஒருவர் பொலிஸ்மா அதிபர் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தார்கள் வந்தபோது நாம் அவர்களை வரவேற்று அவர்களுக்கு குடிப்பதற்கு செவ்விளனி வெட்டி கொடுத்திருந்தோம்

மற்றும் இனிப்புகள் வழங்கியிருந்தோம் பின்னர் எமது போராளிகளை அழைத்துக்கொண்டு உலங்குவானூர்தி கொழும்பை நோக்கி பறந்தது

திட்டமிட்டபடி பேச்சுவார்த்தையும் இனிமையாக அமைந்தது குறிப்பாக அந்தப் பேச்சுவார்த்தை இந்திய ராணுவத்தை வெளியேற்றுவதற்காக இடம்பெற்றது

அதேபோல் இந்திய ராணுவமும் வெளியேறியது குறிப்பாக இரண்டு தடவை குளவி சுட்டான் பகுதியில் உலங்குவானூர்தி தரையிறங்கியது

அந்த நாட்களை இன்றும் மறக்க முடியாது அந்த நேரத்தில் இருந்த போராளிகள் பலர் உயிரோடு இல்லை

இப்படியான சம்பவங்களை பதிவு செய்வதற்கு உயிரோடு நான் இருக்கின்றேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரியப்படுத்துவது அல்லது எல்லோரையும் சாகக் கொடுத்து நான் மட்டும் உயிரோடு இருப்பதை நினைத்து வேதனைப் படுவதா அல்லது எங்களை நம்பி வீரச்சாவடைந்த போராளிகளை ஏமாற்றுகின்றோம் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது

அதிகாரம் உள்ளவர்கள் செய்ய மறுக்கின்றார்கள் செய்யத் துடிக்கும் எங்களை தடுக்கிறார்கள்

யாரிடம் சொல்லி அழுவது இனிவரும் காலங்களில் இவர்களுக்கு எதிராக போராடுவதா காலம்தான் பதில் கூறும்

—————————————-

இப்படிக்கு விதானை . ம . கஜன் 

Comment here