Featuredசெய்திகள்

இலங்கை ஜனாதிபதியை கண்டித்து தமிழர்கள் ஆர்ப்பாட்டம்.

போர்க்குற்றவாளி கோட்டபாய ராஜபக்‌ஷ இம்மாதம் 20ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் இறந்து விட்டார்கள் என்று கூறியது தமிழ் மக்களை மாத்திரம் அல்லாது சர்வதேச அரசாங்கத்தினையும் அதிர்ச்சியளிக்க செய்துள்ளது.

காணாமல் ஆக்கப்ட்டோர் அனைவரும் இராணுவத்திடம் கையளிக்கும் போது உயிருடனே இருந்தனர். இவற்றுக்கு நேரடி சாட்சியங்களாக பலர் இன்றும் இருக்கின்றார்கள்.

இவ்வாறு கோட்டபாய ராஜபக்‌ஷ கருத்து தெரிவித்திருப்பதானது அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதினை உறுதிப்படுத்துவதாக அமைகின்றது.

இதற்கு கண்டனம் தெரிவித்தும் கோட்டபாய ராஜபக்‌ஷ இற்கு எதிராக சர்வதேச விசாரனை கோரியும், சிறீலங்கா அரசினை “சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்” அல்லது அதற்கு நிகரான “சர்வதேச நீதிப் பொறிமுறை” ஒன்றின் முன் நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 29 ஜனவரி 2020 புதன்கிழமை 4 மணியிலிருந்து 7 மணி வரை10 Downing street, Westminster SW1A 2AA இல் அமைந்துள்ள பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தின் முன் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

இவ் ஆர்ப்பாட்டமானது தமிழ் தகவல் நடுவம் (TIC), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE), பிரித்தானிய தமிழர் பேரவை (BTF), பழைய மாணவர் சங்கங்கள், ஊர் சங்கங்கள், திருக்கோயில் அமைப்புக்கள், தமிழ் பாடசாலைகள் உட்பட பல்வேறு புலம்பெயர் அமைப்புகளின் பங்களிப்போடும் ஒழுங்கமைக்கபட்டிருந்தது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இது வரை ஸ்ரீலங்கா இனவாத அரச படையினரால் கைது செய்யப்பட்டு அல்லது உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்களை காட்சிப்படுத்தி சர்வதேசத்திடம் நீதி வேண்டி ஆர்பாட்ட காரர்கள் போராடினார்கள்.

Comment here