இராசி பலன்

இந்த வார இராசிபலன் – 26/01/2020 – 01/02/2020

மேஷம்: பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். பிள்ளைகள் விரும்பிய பொருளை வாங்கித்தருவீர்கள். எதிரியால் உருவான தொந்தரவு மறையும். மனைவி உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார்.குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கான சூழல் உருவாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி அடைந்து தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சூழ்நிலை உணர்ந்து பொறுப்புணர்வுடன் பணிபுரிவர். பெண்கள் நினைத்தது நடக்க இஷ்ட தெய்வ வழிபாட்டை நடத்துவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து நண்பருக்கும் உதவுவர்.

பரிகாரம் : பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.

ரிஷபம்: சந்திரன், புதன் நற்பலன் தருவர். சமூக நிகழ்வுகள் மனதிற்கு அதிருப்தியை ஏற்படுத்தலாம். தாமதமான பணி புதிய முயற்சியால் நிறைவேறும். வாகனப் பயன்பாடு அளவுடன் இருக்கும்.பிள்ளைகளின் செயலில் திறமை வெளிப்படும். நண்பரிடம் கடனாக கொடுத்த பணம் கிடைக்கும். உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவீர்கள். விஷப்பிராணிகளிடம் விலகுவது நல்லது. மனைவியின் ஆர்வமிகு செயலில் சிறு குளறுபடி ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் மறைமுக போட்டியால் லாபம் குறையும். பணியாளர்கள் பிறருக்காக பணப் பொறுப்பை ஏற்க வேண்டாம். பெண்கள் ஓய்வில் ஆர்வம் கொள்வர். மாணவர்கள் படிப்பில் புதிய யுக்தியை பின்பற்றுவர்.

பரிகாரம் : முருகன் வழிபாடு வெற்றி தரும்.

மிதுனம் : செவ்வாய், குரு, சுக்கிரன், சந்திரனால் கூடுதல் நற்பலன் கிடைக்கும். சிறு செயலையும் நேர்த்தியாக செய்வீர்கள். தாய்வழி உறவினர்கள் விரும்பி வந்து சொந்தம் பாராட்டுவர்.பிள்ளைகள் பெற்றோரிடம் அன்பு, பாசத்துடன் பழகுவர். குடும்பத் தேவைக்கான பணம் தாராளமாக கிடைக்கும். எதிரிகள் தந்த சிரமங்கள் மறையும். மனைவி கருத்து ஒற்றுமையுடன் குடும்ப நலன் பேணுவார். நண்பர்களுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் விற்பனை செழித்து சேமிப்பு கூடும். பணியாளர்களுக்கு நிர்வாகத்திடம் நற்பெயர் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர்.

சந்திராஷ்டமம் : 26.1.2020 காலை 6:00 – மாலை 5:53 மணி

பரிகாரம் : நரசிம்மர் வழிபாடு நல்வாழ்வு தரும்.

கடகம்: புதன், கேது, சனீஸ்வரர், சுக்கிரனால் கூடுதல் நன்மை கிடைக்கும். மனஉறுதியுடன் பணிபுரிவீர்கள். பணவரவு தாராளமான அளவில் இருக்கும். உடன்பிறந்தவர்களுக்கு தக்க சமயத்தில் உதவுவீர்கள்.சமூகத்தில் அந்தஸ்து கூடும். பிள்ளைகள் பெற்றோரின் அறிவுரையை மதித்து செயல்படுவர். எதிரியிடம் இருந்து விலகுவது மிகுந்த நன்மை தரும். மனைவியின் அன்பு, பாசம் மனதில் நெகிழ்ச்சியை தரும். தொழிலில் உற்பத்தி, விற்பனை சீராக இருக்கும். பணியாளர்கள் அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்வர். மாணவர்கள் அபார ஞாபகத் திறனால் படிப்பில் சிறந்து விளங்குவர்.

சந்திராஷ்டமம் : 26.1.2020 மாலை 5:54 – 28.1.2020 மாலை 5:08 மணி

பரிகாரம் : மகாலெட்சுமி வழிபாடு சகல வளம் தரும்.

சிம்மம்: சூரியன், ராகு, குரு, சந்திரன் அதிர்ஷ்ட பலன் வழங்குவர். குடும்பத்திற்கான தேவை அதிகரிக்கும். வாகனப் பயணம் அளவுடன் இருக்கும். பிள்ளைகளின் அதிருப்தி எண்ணங்கள் மறைந்து பாசம் கூடும்.குடும்பத்தில் சுபநிகழ்ச்சி உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். மனைவியின் கருத்துக்களை ஏற்பது மிகுந்த பயன் தரும். தொழிலில் உள்ள அனுகூலம் பாதுகாக்க வேண்டும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டங்களை தவறாமல் பின்பற்றவும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர். மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் நல்ல மதிப்பெண்களை பெறலாம். தியானம், தெய்வ வழிபாடு மனஅமைதியை தரும்.

சந்திராஷ்டமம் : 28.1.2020 மாலை 5:09 – 31.1.2020 மாலை 4:47 மணி

பரிகாரம் : துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.

கன்னி: செவ்வாய், புதன், சந்திரன் சுபபலன் தருவர். மனதில் தோன்றும் புத்துணர்வால் பணிகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். உங்களின் நற்செயல் நண்பரின் பாராட்டை பெறும்.வெளியூர் பயணம் இனிய அனுபவத்தை தரும். பிள்ளைகளின் தகுதி, திறமை வளர துாண்டுகோலாக செயல்படுவீர்கள். பூர்வ புண்ணிய பலன் குடும்பத்திற்கு துணை நிற்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவியிடம் குடும்ப விவகாரம் பற்றிய பேச்சை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரம் செழித்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்களுக்கு கூடுதல் சலுகை கிடைக்கும். பெண்கள் செலவில் சிக்கனத்தை பின்பற்றுவர். மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் தேவை.

சந்திராஷ்டமம் : 31.1.2020 மாலை 4:48 – 1.2.2020 நாள் முழுவதும்.

பரிகாரம் : அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

துலாம்: சனீஸ்வரர், கேது, சுக்கிரன், சந்திரன் ராஜயோக பலனை வழங்குவர். முக்கியஸ்தரின் உதவி கிடைக்கும். திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். வாகனப் பயணம் எளிதாக அமையும்.பிள்ளைகளின் எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். எதிரியால் இருந்த தொல்லை விலகும். மனைவியின் ஜாதகம் கூடுதல் பலனை தரும். குடும்பத்தில் ஒற்றுமை வளர்ந்து மகிழ்ச்சி மலரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியுடன் லாபமும் அதிகரிக்கும். பணியாளர்கள் அயராத முயற்சியினால் நிர்வாகத்திடம் நற்பெயர் எடுப்பர். பெண்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவர். மாணவர்கள் படிப்பில் சிறந்து பாராட்டு, பரிசு பெறுவர்.

பரிகாரம் : மீனாட்சி வழிபாடு சகல நன்மை தரும்.

விருச்சிகம்: சூரியன், புதன், குரு, சுக்கிரன், சந்திரனால் வியத்தகு நற்பலன் கிடைக்கும். கடும் உழைப்பினால் பணி சிறக்கும். உடன்பிறந்தவர் தக்க சமயத்தில் உதவுவர்.வெளியூர் பயணம் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பு, வேலையில் அபார முன்னேற்றம் காண்பர். பூர்வ சொத்துக்களில் தாராள பணவரவு கிடைக்கும். மனைவி உங்களின் கருத்துக்களை ஏற்று செயல்படுவார். நண்பருடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்திடம் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டுக்கு உதவுவர். மாணவர்கள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர். நல்ல நுால்களை படிப்பதால் மனம் அமைதி பெறும்.

பரிகாரம் : தன்வந்தரி வழிபாடு ஆரோக்கியம் தரும்.

தனுசு: சந்திரன், சுக்கிரன் அனுகூல பலன் தருவர். மனதில் உற்சாகம் குறையாமல் செயல்படுவீர்கள். பணிகள் நிறைவேற அதிக உழைப்பு தேவைப்படும். உறவினர்களிடம் விவாதம் பேச வேண்டாம்.வெளியூர் பயணங்களில் பாதுகாப்பை பின்பற்றுவது நல்லது. பிள்ளைகள் பெற்றோர் சொல்லை தயக்கமுடன் ஏற்றுக்கொள்வர். வழக்கு, விவகாரங்களில் சமரச முயற்சி நன்மை தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனைவி அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரத்தில் பணப் பரிவர்த்தனை சீராக இருக்கும். பணியாளர்கள் குறிப்பிட்ட காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பெண்கள் நகையை கடனாக கொடுக்க, வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அக்கறை கொள்வர்.

பரிகாரம் : சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.

மகரம்: சுக்கிரன், ராகு, செவ்வாய், சந்திரன் கூடுதல் நற்பலன் தருவர். எல்லோரிடம் நற்பெயர் எடுப்பீர்கள். தாயின் அன்பு, ஆசி துணை நிற்கும். பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக செயல்படுவீர்கள்.உடல் நலனில் அக்கறை கொள்வது மிகுந்த பயனளிக்கும். மனைவி விரும்பிய பொருளை வாங்கித் தந்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளவும். தொழில் அபிவிருத்திக்காக அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம். பணியாளர்கள் கூடுதல் வேலையையும் எளிதாக முடிப்பர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த பெண்கள் தாமாக முன்வந்து ஏற்பாடுகளை செய்வர். மாணவர்கள் படிப்பில் அதிக மதிப்பெண் பெறுவர்.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

கும்பம்: குரு, சனீஸ்வரர், சுக்கிரன், கேது, சந்திரனால் நன்மை உண்டாகும். நண்பர்களின் மனம் அறிந்து பேசுவீர்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும்.பிள்ளைகள் தாய் கூறும் அறிவுரையை ஏற்று செயல்படுவர். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். மனைவி வழி சார்ந்த உறவினர்களால் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பெண்கள் குடும்ப நலனை பாதுகாப்பர். மாணவர்கள் படிப்பில் சிறப்பான இடம் பெறுவர்.

பரிகாரம் : சிவன் வழிபாடு தொழிலில் வளர்ச்சி தரும்.

மீனம்: சூரியன், சுக்கிரன், சந்திரனால் கூடுதல் நற்பலன் கிடைக்கும். உங்களின் நற்செயலை கண்டு நண்பர்கள் பெருமை கொள்வர். உடன்பிறந்தவர்களின் அன்பு, பாசம் நெகிழ்ச்சி தரும்.திட்டமிட்ட செயல் எதிர்பார்த்தபடி நிறைவேறும். வீடு, வாகனத்தில் பாதுகாப்பு அவசியம். பிள்ளைகள் சில விஷயங்களில் குழப்பம் அடைவர். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடனில் ஒரு பகுதியை செலுத்துவீர்கள். மனைவியின் ஆலோசனை நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் உருவாகும் போட்டியை எளிதாக சரி செய்வீர்கள். பணியாளர்கள் பணியிடச் சூழல் உணர்ந்து செயல்படுவர். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

பரிகாரம் : பைரவர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

Comment here