இராசி பலன்

இன்றைய ராசி பலன் – டிசம்பர் 30,2019

மேஷம் : வாழ்வில் புதிய வசந்த காலம் உருவாகும். தொழில், வியாபாரம் நல்ல விதமாக முன்னேற்றம் பெறும். அபரிமிதமான அளவில் பண வரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். நித்திரையில் தெய்வீகம் தொடர்பான கனவு வரும்.

ரிஷபம் : முக்கியமான விஷயத்தில் சுமூக தீர்வு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முன்னேற கூடுதல் பணி புரிவீர்கள். தாராள பண வரவு கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் உருவாகும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மிதுனம் : எதிர் வரும் பணிகளுக்காக முன்னேற்பாடு செய்வது நல்லது. தொழிலில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும். சேமிப்பு பணம் முக்கிய செலவுக்கு பயன்படும். அறிமுகம் இல்லாதவர் தரும் உணவு உண்ண கூடாது.

கடகம் : குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கை தரும். தொழில், வியாபாரத்தில் இலக்கு படிப்படியாக நிறைவேறும். கொஞ்சம் கடன் பெறுகின்ற நிலை உண்டு. கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும்.

சிம்மம் : செயலில் லட்சிய நோக்கம் நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற அதிக மூல தனம் செய்வீர்கள். உற்பத்தி, விற்பனை அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும்.

கன்னி : சொந்த நலன்களை தியாகம் செய்வீர்கள். பலராலும் அனுகூலம் கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதல் பணி புரிவீர்கள். பண பரிவர்த்தனை சீராகும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

துலாம் : உருவாகிற கூடுதல் பணிகளால் சிரமம் ஏற்படலாம். பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரம் ஓரளவு வளர்ச்சி பெறும். பண வரவு சிக்கன செலவுகளுக்கு பயன்படும். பொருட்கள் இரவல் கொடுக்க, வாங்க கூடாது.

விருச்சிகம் : அறிமுகம் இல்லாதவரிடம் பொது விஷயம் பேச வேண்டாம். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பண பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்றவும். கால கெடு தவறிய உணவு பொருள் கவன குறைவால் வாங்க நேரிடலாம்.

தனுசு : நற்செயல்கள் அனுகூல பலன்களை பெற்று தரும். இஷ்ட தெய்வ அருளால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். விரும்பிய உணவு உண்டு மகிழ்வீர்கள்.

மகரம் : சிலர் சுய லாபத்திற்காக உதவ முன் வருவர். தொழில், வியாபாரத்தில் கூடுதல் உழைப்பு வளர்ச்சியை உருவாக்கும். தியானம், தெய்வ வழிபாடு மனதில் அமைதி தரும். மாணவர்கள் பாதுகாப்பு குறைந்த இடங்களில் செல்ல கூடாது.

கும்பம் : மனதில் உற்சாகமும், நம்பிக்கையும் வளரும். தொழில், வியாபாரம் செழிக்க கூடுதல் பணி புரிவீர்கள். முக்கிய வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு அரசு தொடர்பான உதவி கிடைக்கும்.

மீனம் : நண்பரின் யதார்த்த பேச்சு சங்கடம் ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, விற்பனை இருக்கும். பண வரவுக்கேற்ப, செலவுகளை திட்டமிடுவீர்கள். வெளியூர் பயண திட்டத்தில் மாறுதல் உண்டு.

Comment here