உள்ளக அறிக்கையை வெளியிட்டார் பான் கீ மூன் – பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிப்பு

November 15, 2012 Comments Off on உள்ளக அறிக்கையை வெளியிட்டார் பான் கீ மூன் – பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிப்பு
உள்ளக அறிக்கையை வெளியிட்டார் பான் கீ மூன் – பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிப்பு

சிறிலங்காவில் போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஐ.நா நிறைவேற்றத் தவறியது குறித்த விபரங்கள் அடங்கிய உள்ளக விசாரணை அறிக்கையை, ஐ.நா பொதுச் செயலர் நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் மீதான ஐ.நா பொதுச்செயலரின் உள்ளக மீளாய்வு குழுவின் அறிக்கை என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையில், பொதுமக்களின் இழப்புகள் பற்றி விபரங்களை ஐ.நா வெளியிடத் தவறியது, மற்றும் பொதுமக்கள் கொலைகளுக்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருந்த பொறுப்பு ஆகியவற்றையும் விபரிக்கிறது.

சிறிலங்கா அரசின் அச்சுறுத்தலினால் பரந்தளவிலான படுகொலைகள் குறித்து தகவல்களை வெளியிட ஐ.நா அதிகாரிகள் பயந்தார்கள் என்றும், பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகள் தலையிடவில்லை என்றும், பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா பாதுகாப்புச்சபை தெளிவான உத்தரவை வழங்கவில்லை என்றும் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

128 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையை முழுமையாக http://www.scribd.com/doc/113262240/The-Internal-Review-Panel-Report-on-Sri-Lanka என்ற முகவரியில் பார்வையிடலாம்.

205 total views, 1 views today