சவுதி அரேபியாவின் இலங்கை தூதுவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்படவில்லை

January 19, 2013 Comments Off on சவுதி அரேபியாவின் இலங்கை தூதுவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்படவில்லை
சவுதி அரேபியாவின் இலங்கை தூதுவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்படவில்லை

ரிசானா நபீக் சிரச்சேதம் செய்து மரணதண்டனை நிறைவேற்றப்படமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சவுதி அரேபியாவில் பணிபுரிந்த இலங்கைத் தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார் என அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் இலங்கை தூதுவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரிசானா நபீக் கொல்லப்பட்ட பின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சவுதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதுவரை உடன் திருப்பி அழைத்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.

எனினும் ரியாத்தில் உள்ள இலங்கை தூதுவர் அஹமட் ஜவாட் தொடர்ந்தும் அங்கு பணிபுரிந்து வருவதாகவும், அவரை நாட்டு திருப்பி அழைக்கவோ வேறு ஒருவரை நியமிக்கவோ இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

324 total views, 1 views today