இலங்கை அரசாங்கத்துக்கு இராஜதந்திர அழுத்தம் வேண்டும்! பிரி.மகாராணியிடம் தமிழர் பேரவை கோரிக்கை

January 19, 2013 Comments Off on இலங்கை அரசாங்கத்துக்கு இராஜதந்திர அழுத்தம் வேண்டும்! பிரி.மகாராணியிடம் தமிழர் பேரவை கோரிக்கை
இலங்கை அரசாங்கத்துக்கு இராஜதந்திர அழுத்தம் வேண்டும்! பிரி.மகாராணியிடம் தமிழர் பேரவை கோரிக்கை

தமிழர்களின் குரல்களை திட்டமிட்ட வகையில் இலங்கை அரசாங்கம் நசுக்கி வருவதற்கு எதிராக பிரித்தானிய மகாராணி இராஜதந்திர அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவை இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுபவர்கள் அமைதியாக நாட்டை விட்டு வெளியேறலாம் என்ற அடிப்படையிலேயே இன்று நிலைமை காணப்படுகிறது.

இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறைமைக்கு எதிராக உள்ள எந்த வெளிநாட்டு அரசாங்கமும், நிறுவனங்களும் மற்றும் தனியாட்களையும் இலங்கை அரசாங்கம் ஒரேவகையிலேயே நடத்துகிறது.

இந்தநிலையில் தமது கொள்கைகளுக்கு அப்பால் சென்று செயற்படும் யாரும் நாட்டில் இருந்து அமைதியான முறையில் வெளியேறலாம் என்று நிலைப்பாட்டையும் அது கொண்டுள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது.

189 total views, 1 views today