சவுதியில் ஆகஸ்டில் இறந்தவரின் உடல் ஜனவரியில் இலங்கை வந்தது

January 19, 2013 Comments Off on சவுதியில் ஆகஸ்டில் இறந்தவரின் உடல் ஜனவரியில் இலங்கை வந்தது
சவுதியில் ஆகஸ்டில் இறந்தவரின் உடல் ஜனவரியில் இலங்கை வந்தது

எட்டியாந்தோட்டை பனாவத்தைத் தோட்டத்தை சேர்ந்த 25 வயதான பெருமாள் பிரகாஷ் என்பவர் சவூதி அரோபியாவில் வேலை செய்பவர் இவர் 2012 ஓகஸ்ட் 5ஆம் திகதி அங்கு நிகழ்ந்த வாகன விபத்தொன்றில் மரணமானார். இதுபற்றி பிரகாஷின் நண்பர் மூலமாக அறிந்து கொண்ட பிரகாஷின் பெற்றோர் உடனடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தோடு தொடர்பு கொண்டு பிரகாஷின் உடலை இலங்கைக்கு அனுப்பிவைத்திட நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர். மாதங்கள் கடந்தும் இதுபற்றிய எந்தத் தகவலும் கிடைக்கப் பெறாத நிலையில் அவர்கள் செளமிய இளைஞர் மன்றத் தலைவர் திரு. எஸ். பி. அந்தோனிமுத்துவை சந்தித்து உதவும்படி கேட்டுக் கொண்டனர்.

உடனடியாக செயலில் இறங்கிய எல். அந்தோனிமுத்து வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் இலங்கை மற்றும் சவூதி அரேபிய தூதரக உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டதோடு சவூதி அரேபியா மன்னருக்கும் இது பற்றிய விரிவானகடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இவற்றின் பிரதிபலனாக சுமார் ஐந்து மாதங்கள் கடந்த நிலையில் 2013 ஜனவரி 9ஆம் திகதி பிரகாஷின் பூதவுடல் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அடக்கம் பனாவத்தைத் தோட்ட மைதானத்தில் இம்மாதம் 11ஆம் திகதி நடைபெற்றது.

229 total views, 1 views today