விண்வெளிப் பயண சாதனைக்காக உங்கள் வாக்குகளுக்காக காத்திருக்கும் ஈழத்தமிழர்!

January 21, 2013 Comments Off on விண்வெளிப் பயண சாதனைக்காக உங்கள் வாக்குகளுக்காக காத்திருக்கும் ஈழத்தமிழர்!
விண்வெளிப் பயண சாதனைக்காக உங்கள் வாக்குகளுக்காக காத்திருக்கும் ஈழத்தமிழர்!

இருபது வயதான பல்கலைக்கழக மாணவரான ஏரோ நாட்டில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் கபிலன் துரைராசா அவர்கள் விண்வெளிப்படிப்பு காரணமாக விண்வெளிக்கு செல்லும் சந்தர்ப்பத்தில் உங்கள் அமோக வாக்குகளுக்காக காத்திருக்கிறார்.

இவருடன் இருபது மாணவர்கள் போட்டியில் உள்ளார்கள். அனைவரும் வாக்குப்பதிவின் மூலமாகவே தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இவர்களில் கபிலன் மாத்திரமே ஈழத்தமிழர் எனும் பெருமையுடன் உங்கள் வாக்குகளுக்காக காத்திருக்கிறார். https://www2.axeapollo.com/en_CA/5031/kabilan-thuairajah

தயவு செய்து உங்கள் பேஸ்புக் (facebook) மூலமாக அவருக்கு வாக்களித்து எங்கள் தமிழர்களின் முன்னேற்றப்பாதையில் மீண்டும் ஒரு சாதனையை இந்த கனடா மண்ணில் நிலை நாட்ட உங்கள் ஆதரவை வேண்டி நிற்கிறார்.

எத்தனையோ சாதனைகளை நிலைநாட்டியுள்ள எமது ஈழத்தமிழ் சிறார்கள் மத்தியில் விண்ணில் பறந்து சாதனை நிலைநாட்ட கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை ஈழத்தமிழர்களாகிய நாம் முன்னின்று செயல்படுத்த கிடைத்த சந்தர்ப்பத்தை உங்கள் வாக்குகள் மூலமாக பல மடங்கு எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்று அவரது சாதனைக்கு உறுதுணையாகவும் அனுசரணையாகவும் அனைத்து ஈழத்தமிழர்களும் ஒன்றிணைந்து எமது எதிர்கால சிற்பிகளின் சாதனைகளுக்காக உழைத்திடவேண்டும் என்பதற்காகவே இந்த கடிதத்தை உங்கள் முன் சமர்பிக்கின்றோம்.

சாதனைகளுக்காக இம்மண்ணில் குடிபெயர்ந்த எங்கள் மக்களின் வேதனைகள் சருகாகப்போய் விண்ணில் குடிகொள்ளும் நாட்களுக்காக காத்திருக்கும் உங்கள் கபிலன் போன்ற சாதனையாளர்களை ஊக்குவிக்க உங்களுக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

சந்தர்ப்பமும் சரித்திரப் பதிவும் ஒருமுறைதான் உங்கள் இதயங்களை தட்டி எழுப்பும். எழுந்த இதயத்தோடு தெளிந்த தொலைநோக்குப் பார்வையோடு உங்கள் பிள்ளை கபிலனை தெரிவு செய்து விண்வெளிக்கு அனுப்பிவையுங்கள்.

பின்னர் உங்கள் அனைவரினதும் பெயரும் புகழும் அண்டம் முழுவதும் அலசிக்கொள்ளப்படும். சாதனைகள் படைப்பதற்கு பல சோதனைகளை சந்திக்கவேண்டிய இச்சந்தர்ப்பம் உங்கள் வாக்குகளிலேயே இப்போது சார்ந்துள்ளது.

288 total views, 1 views today