சிராணிக்கு ஆதரவு! ஆளும் தரப்பு தேசியப்பட்டியல் எம்.பி. ரஜீவ விஜயசிங்க நீக்கம்?

January 21, 2013 Comments Off on சிராணிக்கு ஆதரவு! ஆளும் தரப்பு தேசியப்பட்டியல் எம்.பி. ரஜீவ விஜயசிங்க நீக்கம்?
சிராணிக்கு ஆதரவு! ஆளும் தரப்பு தேசியப்பட்டியல் எம்.பி. ரஜீவ விஜயசிங்க நீக்கம்?

இலங்கை ஆளும் தரப்பு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான ரஜீவ விஜயசிங்கவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன.

சிராணி பண்டாரநாயக்காவை பிரதம நீதியரசர் பதவியிலிந்து நீக்குவதற்கான விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றபோது அது தொடர்பான வாக்கெடுப்பில் ரஜீவ விஜயசிங்க கலந்து கொள்ளவில்லை.

இந்த வாக்கெடுப்பிலிருந்து தன்னைத் தவிர்த்துக் கொள்வதற்காக சபையிலிருந்து எழுந்த சென்ற ரஜீவ விஜயசிங்க, பாராளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் நேரத்தைக் கடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்காரணமாக பழிவாங்கும் நோக்கில் அவரது தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படப் போகின்றது என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

274 total views, 1 views today