கையடக்கத் தொலை பேசி மலவாயிலில் ரிங் பன்னியதால் சிக்கிய கைதி!

February 8, 2013 Comments Off on கையடக்கத் தொலை பேசி மலவாயிலில் ரிங் பன்னியதால் சிக்கிய கைதி!
கையடக்கத் தொலை பேசி மலவாயிலில் ரிங் பன்னியதால் சிக்கிய கைதி!

கையடக்கத்தொலைபேசியை மலவாயிலில் மறைத்து வைத்திருந்த கைதியொருவர் அதன் ரிங்டோனினால் சிறைக்காவலர்களிடம் சிக்கிய சம்பவம் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தெரிவருவது,
குறித்த கைதி தடுத்துவைக்கப்பட்டிருந்த அறையில் சிறைகாவலர்கள் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது கைதியிடமிருந்து கையடக்கத்தொலைபேசி ரிங்டோன் சத்தம் கேட்டுள்ளது. எனினும் அவரின் வசம் கையடக்கத்தொலைபேசி இருப்பதனை காவலர்களால் காணமுடியவில்லை.

எனினும் கையடக்கத்தொலைபேசி அவரிடம் இருப்பதை காவலர்கள் உறுதிசெய்தமையையடுத்து அந்நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து வைத்தியர்கள் அவரின் மலவாயிலில் கையடக்கத்தொலைபேசி ஒழித்து வைக்கப்பட்டிருந்தமையை கண்டுபிடித்தனர். பின்னர் அதனை வெளியே எடுத்துள்ளனர்.

பின்னர் 2 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின்னர் அக்கைதி சிறைக்கு திரும்பியுள்ளார்.
குறித்த கைதியின் வயது 58 எனவும் அவர் திருட்டு குற்றச்சாட்டொன்றின் பேரில் 10 வருடகாலம் சிறைத்தண்டையை அனுபவித்து வருபவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

195 total views, 1 views today