சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ய முயன்றவருக்குச் சிறை

February 28, 2013 Comments Off
சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ய முயன்றவருக்குச் சிறை

பதின்ம வயதுச் சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டமை தொடர்பான வழக்கில் சந்தேகநபர் குற்றவாளியாக இனங்காணப் பட்டு 6 மாத காலசிறைத் தண்டனை விதித்து, அதனை 5 வருடத்துக்கு ஒத்திவைத்தது நீதிமன்று.

ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஆர்.எஸ்.மகேந்திரராஜா முன்னிலையில் இந்த வழக்கு தீர்ப்புக்காக நேற்று புதன்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.

2009 ஆம் ஆண்டு இந்தத் துஷ்பிரயோக முயற்சி இடம்பெற்றுள்ளது. இந்தக் குற்றச்சாட்டில் புங்குடுதீவு, 12 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அல்பிரட் டக்ளஸ் பெர்னான்டோ என்பவர் பொலி ஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நீதிமன்றில் முற்படுத்தி அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்திருந்தனர் பொலிஸார்.

சந்தேகநபர், தான் சுற்ற வாளியென்று மன்றில் தெரி வித்ததால் வழக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது. அவர் தொடர்பான வழக்கு விசாரணையின் இறுதியில் அவர் குற்றவாளியாக இனங் காணப்பட்டார்.

இதனையடுத்து அவருக்கு நேற்றுத் தீர்ப்பளிக்கப்பட் டது. இதன்படி அவருக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து 5 வருடங்களுக்குத் தண்டனை ஒத்திவைக்கப்பட் டது. அந்தக் காலப்பகுதியில் குறித்த குற்றவாளி மீண்டும் அவ்வாறான குற்றச் செய லில் ஈடுபடுவாராயின், அவர் சிறைத்தண்டனை அனுப விக்க வேண்டும்.

154 total views, 1 views today