ஜோ்மனி பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தோல்வி!

March 2, 2013 Comments Off on ஜோ்மனி பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தோல்வி!
ஜோ்மனி பாராளுமன்றத்தில் இலங்கைக்கு எதிரான பிரேரணை தோல்வி!

ஜேர்மன் நாட்டு பாராளுமன்றத்தில் (Bundestag) அந்நாட்டு எதிர்க்கட்சியால் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பிரேரணையொன்று ஆளுங்கட்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியாலேயே இப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை பாரளுமன்றத்தின் 225 ஆவது தொடரின் போதே இப்பிரேரணை முன்வைக்கப்பட்டதாக ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவரலாயம் அறிவித்துள்ளது.

“UN Human Rights of Sri Lanka and use the rule of law, Observance of human rights and call for reconciliation” என்ற தலைப்பில் சமூக ஜனநாயகக் கட்சியயின் தலைவரான பிராங்க் வோல்ட்டர் ஸ்டீன்மியராலேயே இப் பிரேரணை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தல்,
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தல்,
நல்லாட்சிக்கு வலியுறுத்தல்

போன்ற விடயங்களை இப்பிரேரணை உள்ளடக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு ஆரம்பத்தில் விஜயம் மேற்கொண்டிருந்த ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜேர்கன் கிலிம்கே இப்பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் இது அவசியமற்றதொன்றென வாதிட்டுள்ளார்.

493 total views, 1 views today