புலி!- பீதியில் திரண்ட மக்கள்

March 2, 2013 Comments Off on புலி!- பீதியில் திரண்ட மக்கள்
புலி!- பீதியில் திரண்ட மக்கள்

அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்திற்குள் இன்று புலியொன்று பிரவேசித்ததையடுத்து, அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

காரைதீவு 2 ம் பிரிவிலுள்ள வீட்டு வளவிலுள்ள வேம்பு மரத்தில் பல மணிநேரம் தங்கியிருந்தது. அதனைப் பார்க்க மக்கள் பயத்துடன் திரண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், வனவிலங்கு அதிகாரிகளும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

சுமார் 4 அடி நீளமான இப்புலியைப் பிடிப்பதற்கான ஏற்பாடுகளை வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

582 total views, 1 views today