ஹக்கீமின் புதல்வியின் திருமணத்தில் பங்கேற்ற மஹிந்த, ரணில்!

March 5, 2013 Comments Off
ஹக்கீமின் புதல்வியின் திருமணத்தில் பங்கேற்ற மஹிந்த, ரணில்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமின் புதல்வி ஸைனப், சிரேஷ்ட சட்டத்தரணி இக்ராம் முஹம்மதின் புதல்வர் மில்ஹான் ஆகியோரின் திருமண வைபவம் நேற்று முன்தினம் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இத்திருமண வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள், எம்.பி.க்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் அரசியல் பிரமுகர்கள் என பல தரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கத்துவத்திற்கான தேசியப் பணிப்பாளர் ஏ.சி.எஹியாகான் படத்தில் காணப்படுகிறார்

203 total views, 1 views today