சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட நீதிமன்றம் உத்தரவு

January 4, 2017 Comments Off on சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட நீதிமன்றம் உத்தரவு
சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை வெளியிட நீதிமன்றம் உத்தரவு

இறுதிக்கட்டப் போரின்போது சரணடைந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக பிபிசி சிங்கள சேவையில் செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இந்தப் பட்டியலை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாகக் கையளிக்க வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், ராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் காணாமல் போயுள்ளதாக பதியப்பட்ட வழக்கொன்றை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோதே நீதிமன்றம் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
balakumaran

12,018 total views, 1 views today