ஆபிரிக்க நாடு ஒன்றில் இருந்து புலிகளின் விமானம் முதன் முறையாக வன்னி வந்தது

January 8, 2017 Comments Off on ஆபிரிக்க நாடு ஒன்றில் இருந்து புலிகளின் விமானம் முதன் முறையாக வன்னி வந்தது
ஆபிரிக்க நாடு ஒன்றில் இருந்து புலிகளின் விமானம் முதன் முறையாக வன்னி வந்தது

விடுதலைப் புலிகள் பலமாக இருந்த கால கட்டத்தில் சிலின் 143 என்ற இலகு ரக வானூர்திகளை அவர்கள் கொள்வனவு செய்து. அதனை வன்னிக்கு தருவித்து இருந்தார்கள்.

இந்த விமானங்கள் இரண்டும், முதன் முறையாக வன்னி நிலப்பரப்பை எட்டியவேளை எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் தான் இவை. பின்னரே அவற்றை புலிகள் போர் விமானங்களாக மாற்றி. குண்டுகளை சுமந்து சென்று தாக்கும் விதத்தில் வடிவமைத்தார்கள்.

பின்னர் சில முக்கிய விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வன்னிக்குள் கொண்டுவர இவர்கள், சில முறை இந்த விமானத்தை பயன்படுத்தி நடுக் கடலில் நின்ற தமது கப்பலில் இருந்து ஆயுதங்களையும் தருவித்தார்கள்.

இதனை இவர்கள் எவ்வாறு கடலில் இறக்கி ஏற்றினார்கள் என்பது இதுவரை புரியாத புதிர் தான். கடல் விமானத்தை போல வடிவமைத்து. பின்னர் அதனை தாக்குதல் விமானமாக மாற்றியிருக்கவேண்டும் என்று கூறப்படுகிறது.air-tiger air-tiger01

59,465 total views, 1 views today