ஒரு நாள் ஆளுநர் ஆகிறார் ஓ.பன்னீர் செல்வம்!

January 8, 2017 Comments Off on ஒரு நாள் ஆளுநர் ஆகிறார் ஓ.பன்னீர் செல்வம்!
ஒரு நாள் ஆளுநர் ஆகிறார் ஓ.பன்னீர் செல்வம்!

முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு கவர்னருக்கு கிடைக்க கூடிய கவுரவம் வரும் குடியரசு தினத்தன்று கிடைக்கப் போகிறது.

அதாவது அன்று சென்னையில் அவர் தேசிய கொடியை ஏற்றி வைக்க உள்ளதாக ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் கூறியுள்ளதாக இந்து ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வழக்கமாக ஆளுநர்கள் குடியரசு தினத்தன்று மாநில தலைநகரங்களில் தேசிய கொடியை ஏற்றி வைப்பார்கள்.

முதலமைச்சர்கள் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி வைப்பார்கள். அதே நேரம் ஆளுநர்கள் குடியரசுத் தினத்தன்று மாநில தலைநகரங்களில் இல்லாத சூழல்களில் முதலமைச்சர் தேசிய கொடியை ஏற்றி வைக்க சட்டத்தில் இடம் உள்ளதாம்.

ஆனால் தமிழகத்திற்கு அந்த தேவை ஏன் ஏற்பட்டது என்றால், தமிழகத்திற்கு நிரந்தர ஆளுநர் கிடையாது.

தற்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், மராட்டிய மாநிலத்தின் ஆளுநராக இருப்பதால் அவர் ஜனவரி 26 ஆம் தேதி மும்பை செல்கிறார்.

இதன் காரணமாக அன்று முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
j-jayalalithaa-o-panneerselvam-tamil-nadu

180 total views, 2 views today