திருமலையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிப்பு

January 9, 2017 Comments Off on திருமலையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிப்பு
திருமலையில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவிப்பு

திருகோணமலை மாவட்டத்திலுள்ள 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உப்புவேலியிலுள்ள வெல்கம்வெஹெர, மொரவெவ, புல்மூட்டை மற்றும் கோமரங்கடவல ஆகிய பிரதேசங்களில் காண ப்பட்ட புத்தர் சிலைகளுக்கே இவ்வாறு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

உப்புவேலி பொலிஸ் பிரிவிலுள்ள வெல்கம்வெஹெர சந்தியில் காணப்படும் புத்தர் சிலை மற்றும் கோமரங்கடவல ஹிரியாய சந்தியிலுள்ள புத்தர் சிலை என்பவற்றின் மீது கறுப்பு எண்ணெய் வகை வீசி சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த சிலைகளை சீர் செய்யும் பணிகள் அருகிலுள்ள விகாரைகளின் தேரர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் புல்மோட்டை புத்தர் சிலையின் தலைப் பகுதி உடைக்கப்பட்டுள்ளதாகவும், இது இரண்டாவது தடவையாக உடைக்கப்பட்டு ள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
8-1-2017-19-1-6-1

185 total views, 1 views today