குர்திஸ் தலைவருடன் பேச்சுவார்த்தையில் துருக்கி பிரதமர்

January 9, 2017 Comments Off on குர்திஸ் தலைவருடன் பேச்சுவார்த்தையில் துருக்கி பிரதமர்
குர்திஸ் தலைவருடன் பேச்சுவார்த்தையில் துருக்கி பிரதமர்

துருக்கி பிரதமர் Binali Yildirim மற்றும் ஈராக்கின் குர்திஸ் பிராந்திய தலைவர் Massoud Barzani ஆகியோருக்கு இடையிலான நேரடி சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச் சந்திப்பானது ஈராக்கின் குர்திஸ் தலைநகரமான ஏர்பில்லில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது.

இரு தலைவர்களுக்கிடையிலான இச் சந்திப்பின் போது ஈராக்கிய குர்திஸ் மக்களுடன், இராஜதந்திர உறவுகளை புதுப்பித்துக்கொள்ளல் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளல் போன்ற விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.

துருக்கி பிரதமர் ஈராக்குடனான பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவென நேற்று ஈராக்கிற்கு விஜயம் செய்திருந்தார்.

இதற்கமைய நேற்று அவர் ஈராக் பிரதமர் ஹைதர் அல் – அபாடியை நேரில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். குறிப்பாக இந்த சந்திப்பில் பக்கதாத்தில் துருக்கியின் இராணுவ பிரசன்னம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. எனினும், இதற்கு பக்தாத் சாதகமாக பதில் எதனையும் வழங்கவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
mediaitem932780502

202 total views, 1 views today