ஆனையிறவில் ஆகுதியானவர்களின் வீரம் பறைசாற்றிய வீரவணக்க நாள் இன்றாகும்.

January 9, 2017 Comments Off on ஆனையிறவில் ஆகுதியானவர்களின் வீரம் பறைசாற்றிய வீரவணக்க நாள் இன்றாகும்.
ஆனையிறவில் ஆகுதியானவர்களின் வீரம் பறைசாற்றிய வீரவணக்க நாள் இன்றாகும்.

பரந்தன் – ஆனையிறவு படைத் தளங்கள் மீதான தாக்குதலில் உயிர் நீத்த விடுதலைப் புலிகளின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

1997 இல் ஜனவரி ஒன்பதாம் நாள் அதாவது இன்று(9) அதே நாள் அதிகாலையில் ஆனையிறவு படைத்தளங்கள் மீது பல திசைகளில் இருந்தும் முன் நகர்ந்த விடுதலைப் புலிகள் தாக்குதலில் ஈடுபட்டு ஒன்பது ஆட்லிறி எறிகணை தளங்களை கைப்பற்றிய நாளாகும்.

அதே நேரம் எதிரிக்கு எதிர்பாராத இழப்பை ஏற்படுத்தி விட்டு எறிகணை செலுத்திகளை கைப்பற்றியதுடன் அதனை கொண்டு வருவதற்கு பாதை இல்லாததால் அந்த இடத்திலேயே தகர்த்து விட்டு திரும்பினர் விடுதலைப் புலிகள்.

இத் தாக்குதலில் கிட்டத்தட்ட இருநூறு விடுதலை புலி வீரர்கள் தமிழ் ஈழ தாயகத்திற்காக வீரச்சாவைத் தழுவி ஆகுதியானார்கள் அவர்களின் இருபதாம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

490 total views, 1 views today