ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீண்ட பாலியல் அடிமை

January 9, 2017 Comments Off on ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீண்ட பாலியல் அடிமை
ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து மீண்ட பாலியல் அடிமை

சிரியாவின் மொசூல் நகரில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் பாலியல் அடிமையாக சிறைவைக்கப்பட்டிருந்தப் பெண் குறித்த பகுதியில் ஏற்பட்ட தாக்குதலில் காயமுற்றவாறு மீண்டுள்ளார்.

லுமியா ஆஜி பஜார் என்ற குறித்த இளம் வயது பெண் வெளிநாட்டு ஊடகமொன்றிற்கு தான் பெற்ற ஐ.எஸ் அமைப்பின் அனுபவமாக பகிர்ந்துள்ளதாவது, ‘தானும் தன்னைப்போன்ற ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் அடிமைக்காக விற்கபட்டுள்ளோம்.

தன்னை ஒரு வயதான ஐ.எஸ் தலைவரின் பாலியல் அடிமையாக விற்றனர். குறித்த கொடூரன் தனது(லுமியா) மதத்திற்கு விரோதமான ஆடைகளை அணியச்செய்ததோடு, வெறிபிடித்த படைகளுக்கு தன்னை பாலியல் விருந்தாக்கி, பல்வேறு கொடுமைகளை செய்தனர்.

நான் தொடர்ச்சியாக தப்பிக்க முயற்சித்து அவர்களிடம் பிடிபட்டு வந்தேன். இந்நிலையில் என்னை மொசூல் நகரத்திலுள்ள தீவிரவாத நீமன்றில் நிறுத்தி இனி நான் தப்பிக்க முயற்சித்தால் கடுமையாக தண்டிக்கப்படுவதாய் எச்சரிக்கப்பட்டேன்.

ஆயினும் நான் தொடர்ச்சியாக துன்புறுத்தப்பட்டாலோ, எனக்கான உணவை நிறுத்தி துன்புறுத்தினாலோ அல்லது ஒரு காலை வெட்டி என்னை தண்டித்தாலோ நான் தப்பிக்கும் எனது முயற்சியை விடமாட்டேன் என சபதம் பூண்டேன்.

எனது சபதத்திற்கு பரிகாரமாக என்னை வேறோரு தீவிரவாத தலைவனுக்கு விற்றார்கள். அங்கும் அதே கொடுமைகளைதான் அனுபவித்தேன். இருப்பினும் அவர்கள் செய்த கொடுமைகள்தான், அங்கிருந்து நான் உயிருடன் மீண்டு, மீண்டும் வாழவேண்டும் எனும் உணர்வை என்னிடத்தில் ஏற்படுத்தியது’. எனக் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலால் சீர்குழைந்துள்ள முகத்தோடு தனது நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் லுமியா. இந்நிலையில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் லுமியா மற்றும் அவரைப்போல் ஐ.எஸ் அமைப்பிடமிருந்து மீண்ட மற்றொரு பெண்ணிற்குமாக, சர்வதேச மனித உரிமை ஆணையத்தின் சாஹரவோ பரிசிலை வழங்கி கௌரவித்துள்ளது.

பரிசிலை பெற்றப் பெண்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இன்னும் பாலியல் அடிமைகளாக சிக்குண்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் படி கேட்டு கொண்டனர். அத்தோடு தங்களுக்கு ஏற்பட்ட நிலைமைகள் உலகில் எப்பாகத்திலும் ஏற்படாதிருக்க சர்வதேச சமூகங்களின் செயற்பாடு அவசியம் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.girl01 girl02 girl03

531 total views, 1 views today