அம்பாந்தோட்டை விவகாரம்; பாராளுமன்றத்தில் அமைதியின்மை

January 9, 2017 Comments Off on அம்பாந்தோட்டை விவகாரம்; பாராளுமன்றத்தில் அமைதியின்மை
அம்பாந்தோட்டை விவகாரம்; பாராளுமன்றத்தில் அமைதியின்மை

அம்பாந்தோட்டை ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் கூட்டு எதிர்கட்சியின் தினேஷ் குணவர்தன கேள்வியெழுப்பியதால் பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தினேஷ் குணவர்தனவின் கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஆர்ப்பாட்டத்தில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு எதிர்ப்புகள் இருக்குமாயின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் யோசனையொன்றை முன்வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையால் பாராளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 24 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

190 total views, 1 views today