மண்­ணெண்ணெய் ஒரு லீற்­றரின் விலை நேற்­றி­ரவு முதல் 5 ரூபாவால் குறைப்பு

January 11, 2017 Comments Off on மண்­ணெண்ணெய் ஒரு லீற்­றரின் விலை நேற்­றி­ரவு முதல் 5 ரூபாவால் குறைப்பு
மண்­ணெண்ணெய் ஒரு லீற்­றரின் விலை நேற்­றி­ரவு முதல் 5 ரூபாவால் குறைப்பு

வரவு – செலவுத் திட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்ட யோச­னை­யின்­படி மண்­ணெண்ணெய் ஒரு லீற்­றரின் விலை நேற்று நள்­ளி­ரவு முதல் 5 ரூபாவால் குறைக்­கப்­பட்­டுள்­ள­தாக நிதி­ய­மைச்சு தெரி­வித்­துள்­ளது.

குறித்த வரவு – செலவுத் திட்ட யோச­னை இது­வரை அமுல்­ப­டுத்­தப்­ப­டாமை தொடர்பில் விமர்­ச­னங்­கள் எழுந்­தி­ருந்­தன.

இந்­நி­லையில் பெற்­றோ­லிய வளங்கள் அமைச்சர் சந்­திம வீரக்­கொ­டி, இது­ கு­றித்த பரிந்­துரை நிதி­ய­மைச்­சி­லி­ருந்து கிடைக்­கப்­பெ­ற­வில்லை எனவும் இத­னா­லேயே மண்­ணெண்­ணெயின் விலையை குறைக்க முடி­யா­ம­லுள்­ளது எனவும் தெரி­வித்­தி­ருந்தார்.

இத­ன­டிப்­ப­டையில் தற்­போது 49 ரூபா­வா­க­வுள்ள மண்­ணெண்ணெய் ஒரு லீற்­றரின் விலையை 5 ரூபாவால் குறைக்­கு­மாறு நிதி­ய­ம­மைச்சு நேற்று பெற்­றோ­லிய வள அமைச்­சுக்கு அறி­வித்­துள்­ளது.

குறித்த அறி­விப்­புக்­க­மைய நேற்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் புதிய விலை 44 ரூபா என நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

119 total views, 1 views today