பீர் பாட்டிலால் வந்த பிரச்சனையை காண்டம் கொண்டு தீர்த்த டாக்டர்..!!

January 11, 2017 Comments Off on பீர் பாட்டிலால் வந்த பிரச்சனையை காண்டம் கொண்டு தீர்த்த டாக்டர்..!!
பீர் பாட்டிலால் வந்த பிரச்சனையை காண்டம் கொண்டு தீர்த்த டாக்டர்..!!

சீனாவில், ஒருவர் தவறுதலாக விழுங்கிய பீர் பாட்டில் மூடியை, காண்டம் உதவியுடன் டாக்டர் வெளியே எடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் என்பவர் எப்போதுமே மருத்துவம் படித்ததை அப்படியே பயன்படுத்தாமல், புதுப்புது கிரியேட்டிவ் சிந்தனைகளுடன் இருந்தால் மட்டுமே, நோயாளிகளை காப்பாற்றுவது சாத்தியமாகும். மாறிவரும் நவீன உலகில், ஒவ்வொரு நாளும் டாக்டர்கள் வித்தியாசமான நோயாளிகளை சந்திப்பதே இதற்கான காரணம்.

இங்கேயும் அப்படித்தான் ஒரு விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜியாங்க்சூ மாகாணத்தைச் சேர்ந்தவர் லியு. இவர், நண்பர்களுடன் சேர்ந்து அவ்வப்போது, சரக்கடிப்பது வழக்கம். இந்நிலையில், சில நாட்கள் முன்பாக, லியு பீர் குடித்துள்ளார். வயிறு முட்ட பீர் குடித்தவர், அந்த குஷியில் பீர் பாட்டில் மூடியையும் விழுங்கிவிட்டார்.

இதையடுத்து, அவர் அங்குள்ள லியான்யுன்காகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் சிக்கிக் கொண்ட பீர் பாட்டில் மூடியை எப்படி வெளியே எடுப்பது என நீண்ட நேரம் விவாதித்தனர்.

இதன்முடிவாக, அந்த மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைப் பிரிவு தலைவர் ஜூ விபிங் யோசனைப்படி, காண்டம் எடுத்துக் கொண்டு, ஆபரேஷன் தியேட்டருக்கு, டாக்டர்கள் சென்றனர். அங்கே வந்த ஜூ விபிங், காண்டம் வாய்ப்பகுதியை படிப்படியாக வயிற்றுக்குள் விட்டு, அதற்குள் காற்றை ஊதினார். நீளமாக உப்பியிருந்த காண்டத்தின் முனையில் பாட்டில் மூடி சிக்கியது. பின்னர் அது அப்படியே, காண்டத்திற்குள் வந்துவிட்டது. இதனை மெதுவாக, ஜூ விபிங் வெளியே எடுத்துவிட, அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

மிகவும் எளிதாக தனது உயிரை காப்பாற்றிய டாக்டரைப் பார்த்து, நோயாளி லியு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

557 total views, 1 views today