அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் மைத்திரி?

January 11, 2017 Comments Off on அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் மைத்திரி?
அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் மைத்திரி?

அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே வேட்பாளராக போட்டியிடுவார் என்று சமூக வலுவூட்டல் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஏகோபித்த குரலாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் யார் என்பது குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், கட்சியின் பலரது யோசனைகளின்படி அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரிபாலவே போட்டியிட வேண்டும் என்ற போதிலும், அதுகுறித்து ஜனாதிபதி இதுவரை தீர்மானம் எடுக்கவில்லை என்று கூறினார்.

எவ்வாறாயினும் 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சிமாற்றத்தை அடுத்து புதிய ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்தபோது உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாம் இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

119 total views, 1 views today