மஹிந்த, பஷில், கோத்தா ஆகி­யோரின் பிரஜாவுரி­மையை பறிக்க முயற்சி

January 11, 2017 Comments Off on மஹிந்த, பஷில், கோத்தா ஆகி­யோரின் பிரஜாவுரி­மையை பறிக்க முயற்சி
மஹிந்த, பஷில், கோத்தா ஆகி­யோரின் பிரஜாவுரி­மையை பறிக்க முயற்சி

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ ஆகி­யோரின் அர­சியல் பய­ணத்தை தடுப்­ப­தனை இலக்­காகக் கொண்டு அர­சாங்கம் குற்­றங்­க­ளுக்­கான விசேட நீதி ஆணைக்­கு­ழுவை அமைப்­ப­தற்கு எதிர்­பார்க்­கி­றது எனவே அவ்­வா­றான நட­வ­டிக்­கை­க­ளுக்கு கூட்டு எதிர்க்­கட்சி வன்­மை­யான எதிர்ப்பைத் தெரி­விப்­ப­தாக பாராளு­மன்ற உறுப்­பினர் பந்­துல குண­வர்தன தெரி­வித்தார்.

அந்த ஆணைக்­குழு மூலம் முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ உள்­ளிட்­ட­வர்­களின் பிர­ஜா­வு­ரி­மையை இல்­லா­ம­லாக்­கவும் எதிர்ப்­பார்க்­கின்­றனர் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்­பி­லுள்ள ஸ்ரீ வஜிர ஷர்ம பெளத்த நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
12344

அம்­பாந்­தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணியை வழங்க முடி­யா­விட்டால் பொலன்­னறு­வையில் அதற்­கான காணி ­யை வழங்­கு­வ­தற்கு தயா­ராக உள்­ள­தாக ஜனா­தி­பதி தெரி­வித்­துள்ளார். அக்­க­ருத்து ஆரோக்­கி­ய­மான ஒன்­றல்ல.

எனவே, ஜனா­தி­ப­தியை, பிர­தமர் அவ்­வா­றான நெருக்­க­டி­யான நிலைக்கு உட்­ப­டுத்­தி­யுள்ளார். ஜனா­தி­பதி எதை­யா­வது மேற்­கொள்­வ­தாயின் பிர­த­மரின் தயவை வேண்­டியே நிற்­கின்றார். எனினும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அவ்­வாறு முன்னாள் பிர­த­மரின் தயவை வேண்டி நிற்­க­வில்லை. மேலும் தற்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவின் நட­வ­டிக்­கையில் தலை­யிட முடி­யாத நிலையும் உள்­ளது.

அத்­துடன் அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­யினால் நாடு பொரு­ளா­தார ரீதியில் மிகவும் நெருக்­க­டிக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் காலத்தில் நாட்டின் பொரு­ளா­தாரம் உயர் நிலையில் இருந்­தது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளினால் பொரு­ளா­தாரம் மேலும் இக்­கட்­டான நிலை க்குத் தள்­ளப்­படும் அபாயம் உள்­ளது.

எனினும் அது தொடர்பில் அர­சாங்கம் கவனம் செலுத்­தாமல் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக குரல் கொடுப்­ப­வர்­க­ளுக்கு எதி­ரா­கவே நட­வ­டிக்கை எடுக்­கி­றது. அத்­துடன் பிர­தமர் வெளி­நாடு செல்லும் முன்னர் எவரைக் கைது செய்­ய­வேண்டும்? எவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பது தொடர்­பி­லான ஏற்பாடுகளை மேற்கொண்டு விட்டே செல்கின்றார்.

முன்னாள் அமைச்சர்களின் வாகனம் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்களை கைது செய்கின்றனர். இருந்தபோதிலும் பாரியளவான நிதி மோசடியில் ஈடுபட்டவர்களை அரசாங்கம் பாதுகாக்கிறது என்றார்.

87 total views, 2 views today