கொள்ளையிடப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை பார்வையிட்ட யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்

January 11, 2017 Comments Off on கொள்ளையிடப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை பார்வையிட்ட யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்
கொள்ளையிடப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை பார்வையிட்ட யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் துவிச்சக்கர வண்டி கொள்ளையில் ஈடுபட்ட மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 86 துவிச்சக்கர வண்டிகளும் கைப்பறப்பட்டுள்ளது.
 யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக துவிச்சக்கர வண்டி கொள்ளைகள் அதிகரித்திருந்தன.

குறிப்பாக யாழ். நகரின் பிரதான அலுவலகங்கள் வைத்தியசாலைகள் போன்றவற்றிற்கு செல்லும் பொதுமக்கள் தமது துவிச்சக்கர வண்டிகளை பிரதான வீதியின் வாகனம் நிறுத்தும் இடங்களில் நிறுத்தி விட்டு செல்லும் போது கொள்ளையிடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் பொதுமக்களால் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய பொலிஸார் முன்னெடுத்த விசாரனைகளின் அடிப்படையில் துவிச்சக்கரவண்டி கொள்ளையர்களை கைது செய்திருந்தனர்.

இதன்படி ஊர்காவல்துறை பொலிஸார் 28 துவிச்சக்கர வண்டிகளையும் யாழ். பொலிஸார் 58 துவிச்சக்கர வண்டிகளையும் கைப்பற்றியிருந்ததுடன் இது தொடர்பில் மூவரையும் கைது செய்தும் இருந்தனர்.

இதன்படி கைது செய்யப்பட்ட மூவரும் துவிச்சக்கர வண்டிகளை திருடி சென்று அதனை பாகங்களாக பிரித்து விற்பனை செய்வதாகவும் விசாரனைகளினூடாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குறித்த மூவரையும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.இதேவேளை கைப்பற்றப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை பார்வையிட்ட யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் துவிச்சக்கர வண்டிகள் திருடப்பட்டவர்கள் சான்றுகளை காண்பித்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
download-2

download-3

download-4

193 total views, 1 views today