வவுனியா தேக்காவத்தையில் குடும்பஸ்தர் கொலை

January 11, 2017 Comments Off on வவுனியா தேக்காவத்தையில் குடும்பஸ்தர் கொலை
வவுனியா தேக்காவத்தையில் குடும்பஸ்தர் கொலை

வவுனியா தேக்காவத்தைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பாட்டியுடன் வாடைக்கு குடியிருந்த 25 வயதுடைய பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் வீட்டிற்கு முன்னால் வசித்து வந்தவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த குடும்பஸ்தரின் தாய், தந்தையினர் சுவிஸ்லாந்தில் வசித்து வருவதாகவும் திருமணமாகி மனைவி நைனாதீவில் வசித்து வருவதாகவும் தெரியவருகின்றது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
vavunija1

vavunija2

vavunija3

376 total views, 1 views today