இரட்டை படுகொலை சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியல்

January 11, 2017 Comments Off on இரட்டை படுகொலை சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியல்
இரட்டை படுகொலை சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியல்

மட்டக்களப்பு ஏறாவூர் இரட்டைக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஆறு சந்தேக நபர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவானும் மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியுமாகிய எம்.ஐ.எம். றிஷ்வி உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

ஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாம் ஒழுங்கையிலுள்ள வீட்டில் வைத்து 56 வயதான என்எம்.சித்தி உசைரா மற்றும் அவரது மகளான 32 வயதுடைய ஜெனீரா பாணு மாஹிர் ஆகியோர் கடந்த செப்ரெம்பர் மாதம் 11 ஆம் திகதி அதிகாலை கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து படுகொலை இடம்பெற்ற வீட்டில் திருடப்பட்டிருந்த தங்க நகைகளை புலனாய்வுப் பொலிஸார் திருகோணமலை முள்ளிப்பொத்தானையில் மீட்டிருந்தனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் இன்று மீண்டும் ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

169 total views, 1 views today