கையில் வளர்ந்த மரம் என்ன ஆச்சு தெரியுமா….

January 11, 2017 Comments Off on கையில் வளர்ந்த மரம் என்ன ஆச்சு தெரியுமா….
கையில் வளர்ந்த மரம் என்ன ஆச்சு தெரியுமா….

கடந்த ஆண்டு அதிர்வில் நாம் ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தோம். வங்கதேசத்தின் தென்கிழக்கு கடலோர மாவட்டமான கால்னா பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி அபுல் பாஜாந்தர் (24) என்பவரின் கைகளில் மரம் வளர்கிறது என்று.

அவரது நகங்கள் அளவுக்கு அதிகமாக வளர்ந்து ஒரு மரப்பட்டை பொல காணப்பட்டது.

இதனை பல வெளிநாட்டு மீடியாக்கள் மக்கள் கவனத்திற்கு கொண்டுவந்தார்கள். உடனே உங்களை போல பல நல்ல உள்ளம் படைத்தவர்கள், அவருக்கு உதவ என காசோலைகளை அனுப்பிவைத்தார்கள்.

பிரித்தானியாவில் டெயிலி மெயில் சன் போன்ற பத்திரிகைகள் பணத்தை சேர்த்து அனுப்பிய நிலையில். அவருக்கு 3 தினங்களுக்கு முன்னர் பாரிய அறுவை சிகிச்சை இடம்பெற்று ஒரு அளவுக்கு அவரது விரல்களில் உள்ள மரப்பட்டை போன்ற அந்த நகங்கள் அகற்றப்பட்டுள்ளது.

தற்போது எனது அன்பு மகளை என் கைகளால் அனைத்து கட்டிப் பிடிக்க முடிகிறது என்று அவர் சொல்லி இருக்கும் ஒற்றை வார்த்தை பலரது உள்ளத்தை குளிர்வித்துள்ளது.

ஒரு முஸ்லீம் நபர் என்று கூட பாராமல் பல வெள்ளைக்காரர்களும் வேற்றின மக்களும் இவருக்கு உதவியுள்ளார்கள்.

இது மனித நேயம் உந்த உலகில் இன்னமும் உள்ளது என்பதனை எடுத்துக் காட்டும் ஒரு செயலாக உள்ளது.han han1

9,488 total views, 1 views today