திருமண வீட்டில் நடந்த பயங்கரம்!

May 12, 2017 Comments Off on திருமண வீட்டில் நடந்த பயங்கரம்!
திருமண வீட்டில் நடந்த பயங்கரம்!

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமண மண்டபம் இடிந்து விழுந்து 26 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் பரத்பூர் மாவட்டத்தில் ஒரு திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் அந்த திருமண கலந்து கொண்டனர்.

திடீரென அந்த பகுதியில் பயங்கர சூறாவளி காற்று, இடி, மின்னல் கடுமையாக இருந்தது. சூறாவளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் திருமண மண்டபத்தின் ஒரு பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

90 அடி நீளமும் 13 அடி உயரமும் கொண்ட அந்த சுவர் ஓரத்தில் மக்கள் பலர் இருந்தனர். இடிபாடுகளை அகற்றிய போது 22 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகியது தெரிந்தது.

ஏராளமானவர்கள் காயங்களுடன் உயிருக்கும் போராடியபடி இருந்தனர். அதில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களையும் திருமண வீட்டாரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

6,550 total views, 2 views today