நிதானம் இழந்த இளம்பெண்! நள்ளிரவில் நடந்த கொடூரம்! அடப்பாவிகளா!

May 15, 2017 Comments Off on நிதானம் இழந்த இளம்பெண்! நள்ளிரவில் நடந்த கொடூரம்! அடப்பாவிகளா!
நிதானம் இழந்த இளம்பெண்! நள்ளிரவில் நடந்த கொடூரம்! அடப்பாவிகளா!

டெல்லி எல்லை பகுதியில் உள்ள சிக்கிமை சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த சனிக்கிழமை டெல்லியில் உள்ள தனது நண்பரை சந்திக்க சென்றுள்ளார்.

அப்போது அந்த இளம்பெண் நண்பருடன் மாலைநேரத்தில் சினிமாவிற்கு சென்றுள்ளார். பின்னர் இருவரும் ஒன்றாக உணவு சாப்பிட்டுள்ளனர். அதன் பிறகு நள்ளிரவு வரை நிதானம் தெரியாத அளவிற்கு மது அருந்தி உள்ளனர்.

பின், அங்கிருந்து வாடகை கார் புக் செய்து குர்கானுக்கு வந்தனர். அந்த இளம்பெண் வீட்டிற்கு சற்று முன்பே இறக்கி விட்டுவிட்டு நண்பர் சென்றுவிட்டார்.

அப்போது இளம்பெண்ணை வழிமறித்த 3 பேர் கொண்ட கும்பல், மற்றொரு காரில் கடத்தி சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்தியுள்ளனர். மது போதையில் இருந்த அந்த இளம்பெண்ணை 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

உயிருடன் விட்டால் காட்டி கொடுத்துவிடுவாள் என்று அந்த இளம்பெண்ணை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது அந்த இளம்பெண் கெஞ்சி கதறியதால் சாலையோரம் வீசிவிட்டு சென்றிருக்கின்றனர்.

நினைவு திரும்பி அந்த இளம்பெண் அந்த வழியாக வந்த ஒருவரின் உதவியுடன் அந்த சாலைக்கு அருகில் இருந்த சுங்கசாவடிக்கு வந்து உதவி கேட்டுள்ளார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளம்பெண்ணை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்போது, மருத்துவ பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கும் காவல்துறையினர், அடையாளம் தெரியாத 3 பேர் மீது கடத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5,580 total views, 3 views today