பிரபாகரன் போலவே நீங்களும்

May 18, 2017 Comments Off on பிரபாகரன் போலவே நீங்களும்
பிரபாகரன் போலவே நீங்களும்

பிரபாகரன் போலவே நீங்களும் வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள்.தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் தொகுத்து தருகின்றோம்.
பிரபாகரனைப்போன்று வரலாற்றில் இடம்பிடிக்குமாறு அமைச்சர் மனோவுக்கும் அறிவுரை

பிரபாகரன் இருந்த போது கிழக்கில் புராதன சொத்துக்களை அழிக்க முஸ்லிம்களுக்கு இடம்கொடுக்கவில்லை. எனவே பிரபாகரனின் அழிவையிட்டு நான் வருந்துகின்றேன் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

அரச கரும் மொழிகள் அமைச்சில் நேற்று புதன் கிழமை அமைச்சர் மனோ கணேசனுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேரர் மேலும் தெரிவிக்கையில், தற்காலத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள புராதன சொத்துக்களை இஸ்லாமியர்கள் தமது குடியிருப்புக்களாக மாற்றிக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக பொலனறுவை சோமாவதிய பகுதியில் இந்த நிலைமையை கண்கூடாக பார்த்துக்கொள்ள முடியும். முன்பு யுத்தம் நிலவிய காலத்தில் இந்த பகுதிகளுக்கு செல்ல அச்சப்பட்டார்கள், பிரபாகரன் கூட புராதன சொத்துக்கள், சின்னங்கள் அனைத்தையும் பாதுகாத்துவந்தார். எனவே பிரபாகரன் தற்போது இருபாராயினும் அது சிறந்தாகும். அவரால் புராதன சின்னங்கள் பாதுகாக்கப்படும்..

ஆனால் அவரின் காலத்தில் ஆயுத செயற்பாடுகள் நிலவின. தற்காலத்தில் அந்தச் செயற்பாடு மாற்றம் கண்டுள்ளது. நீங்கள் சட்ட ரீதியிலான நகர்வுகளை முன்னெடுத்துச் செல்கின்றீர்கள் அது கடந்த காலத்தினை விடவும் சிறந்தாகும்.

எனவே பிரபாகரன் போன்று நீங்களும் புராதன சினங்களை பாதுகாப்பதற்கான பொறுப்புக்களையும் ஏற்பதுடன் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை தேடிப்பார்க்கவும் முன்வர வேண்டும், உங்களுக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாங்கள் தொகுத்து தருகின்றோம்.

அதனால் பிரபாகரன் போலவே நீங்களும் வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள். அதனை விடுத்து நல்லிணக்கம் என்ற பேரில் மறைமுகமாக சிங்களவர்களை நிந்தனை செய்யாதீர்கள். எவ்வாறாயினும் தற்போது முஸ்லீம் மக்களின் செயற்பாடுகளுக்கு உரிய சாப்பாடு தயாராகவே உள்ளது என்றார்.

2,132 total views, 7 views today