கிளிநொச்சியில் பொலிஸாா் மீது துப்பாக்கி பிரயோகம்: பிரதேசமெங்கும் படையினா் குவிப்பு

May 19, 2017 Comments Off on கிளிநொச்சியில் பொலிஸாா் மீது துப்பாக்கி பிரயோகம்: பிரதேசமெங்கும் படையினா் குவிப்பு
கிளிநொச்சியில் பொலிஸாா் மீது துப்பாக்கி பிரயோகம்: பிரதேசமெங்கும் படையினா் குவிப்பு

கிளிநொச்சி, பளை- கச்சார்வெளி பகுதியில் நடமாடும் பொலிஸார் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலையடுத்து அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று நள்ளிரவு வேளையில் சேவையில் ஈடுபட்டிருந்த நடமாடும் பொலிஸாரின் வாகனத்தை இலக்கு வைத்தே மேற்படி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து குறித்த பகுதி இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் வாகனத்தை நோக்கி மர்ம நபர்கள் நான்கு முறை துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதில் ஒரு வேட்டு மாத்திரமே பொலிஸ் வாகனத்தை தாக்கியுள்ளது. தாக்குதலில் வாகனம் சிறியளவில் சேதமடைந்த போதிலும் அதனால் அதிகாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மேற்படி தாக்குதலை மேற்கொண்டவர்கள் தொடர்பான விசாரணைகளையும் பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2,455 total views, 7 views today