ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை இன்று முதல் அமுல்

May 19, 2017 Comments Off on ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை இன்று முதல் அமுல்
ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை இன்று முதல் அமுல்

இலங்கைக்கு மீண்டும் வழங்கப்பட்ட ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை இன்று (19) முதல் நடைமுறைக்கு வருகின்றது.

எதிர்வரும் 2021ம் ஆண்டு வரை அந்த சலுகை இலங்கைக்கு வழங்கப்படும் என்று ஐரோப்பிய ஆணைக்குழு கூறியுள்ளது.

இதன்படி ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்ற இலங்கைப் பொருட்களுக்கு அந்த நாடுகளில் விதிக்கப்படுகின்ற வரி தளர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 5 ஆயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

இலங்கையின் ஏற்றுமதிகளில் மூன்றில் ஒரு பகுதி ஐரோப்பிய நாடுகளுக்ேக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

52 total views, 1 views today