விராத் கோலியின் குட்டி ரசிகை: யாரின் மகள் தெரியுமா?

May 19, 2017 Comments Off on விராத் கோலியின் குட்டி ரசிகை: யாரின் மகள் தெரியுமா?
விராத் கோலியின் குட்டி ரசிகை: யாரின் மகள் தெரியுமா?

தென்ஆப்பிரிக்கவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளருமான ஜொண்டி ரோட்ஸ் இந்தியா மீதுள்ள நேசத்தின் காரணமாக தனது மகளுக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்தார்.

அவரது செல்லமகள் இந்தியா இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலியின் தீவிர ரசிகையாகி இருக்கிறாராம்.

விராட் கோலி போஸ்டரின் பின்னணியில் தனது மகள் இந்தியா இருப்பது போன்ற புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ள ரோட்ஸ், ‘விராட் கோலியின் இன்னொரு தீவிர ரசிகையை பாருங்கள். ‘இந்தியா’வை நாம் குறை சொல்ல முடியாது’ என்று கூறியுள்ளார்.

அதற்கு கோலி, ‘ஆகா… என்னவொரு அழகு. ஒட்டுமொத்த அழகையும் தன்னகத்தே கொண்டுள்ள இந்த சிறுமி தனது சிறிய பையில் என்ன எடுத்து செல்கிறாள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கோலி இன்னொரு பதிவில், ‘அடுத்த சீசனில் பெங்களூரு அணி வலுவான அணியாக மீண்டு வரும்’ என்று கூறியிருக்கிறார்.

1,874 total views, 2 views today