கொழும்பு பாடசாலை மாணவி ஒருவரின் அதிர்ச்சிகர செயல்! காதலா காரணம்?

May 19, 2017 Comments Off on கொழும்பு பாடசாலை மாணவி ஒருவரின் அதிர்ச்சிகர செயல்! காதலா காரணம்?
கொழும்பு பாடசாலை மாணவி ஒருவரின் அதிர்ச்சிகர செயல்! காதலா காரணம்?

கொழும்பு பாடசாலை மாணவி ஒருவரின் அதிர்ச்சிகர செயல்! யாரிடம் இருந்து வந்த எஸ். எம்.எஸ்?

கடந்த 15 ஆம் திகதி கொழும்பு பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

குறித்த மாணவியின் தாய் எச்சரித்த காரணத்தினாலேயே அவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு 05, விஜய குமாரதுங்க மாவத்தையை சேர்ந்த, சசின்தனா என்ற 15 வயதுடைய மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

உயிரிழந்த மாணவியின் தாயார் வழங்கிய சாட்சி,

“உயிரிழந்த எனது மகள் 10 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்தார், மகளுக்கு எவ்விதமான சுகயீனங்களும் இருக்க வில்லை.

என் மகளின் பின்னால் ஒருவர் தொடர்வதனை நான் அறிந்தேன்.

இதனால் என் மகளை எச்சரித்தேன்.

ஒருநாள் என் தொலைப்பேசிக்கு அழைப்பொன்று வந்தது.

அதன் பின்னர் நான் அவரது வகுப்பிற்கு அருகில் தொடர்ந்து செல்ல ஆரம்பித்தேன். பின்னர் அண்மையில் ஒரு நாள் எனது தொலைப்பேசிக்கு எஸ் எம் எஸ் ஒன்று வந்தது.

இதற்கு பின்னர், ஒரு போதும் எனது தொலைப்பேசியை எடுக்க வேண்டாம் என நான் அவரை எச்சரித்தேன்.

அதற்கு அடுத்த நாள் முழுவதும் அவர் அறையில் தனியாக இருந்தார். யாரிடமும் பேசவும் இல்லை.

அதற்கு அடுத்த நாள் ஏன் பேசுவதில்லை என மகளிடம் நான் வினவினேன். எனினும் அவர் நடந்துக் கொண்ட விதம் என்னை கோபப்படுத்தியது.

இரண்டு முறை அவரை அடித்தேன்.

அதற்கு பின்னர் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டார்.

இதற்கு முன்னர் அவர் தனது கையை கத்தியால் வெட்டியிருந்தார். நான் கேட்டபோது கோபத்தில் வெட்டினேன் என கூறினார். அறை கதவை மூடிக்கொண்டதன் பின்னர் நானும் மற்ற மகளும் இணைந்து கதவை திறக்க முயற்சித்தோம்.

எனினும் முடியவில்லை.

மூத்த மகள் கண்ணாடி துண்டு ஒன்றை அறைக்குள் விட்டு பார்த்தார். அப்போது கால்கள் இரண்டு மாத்திரமே தெரிந்தது. அதன் பின்னர் பயமாக இருந்தமையினால் வீட்டின் உரிமையாளரை அழைத்தோம்.

அதன் பின்னர் அறையின் கதவை உடைத்து பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். அவரை அங்கிருந்து களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் உயிரிழந்துள்ளார் என தெரியவந்தது… ” என மாணவியின் தாய் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மனவிரக்தியினால், மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

652 total views, 1 views today