இலங்கையில் எச்சரிக்கை விடுக்கும் சூழல்

May 19, 2017 Comments Off on இலங்கையில் எச்சரிக்கை விடுக்கும் சூழல்
இலங்கையில் எச்சரிக்கை விடுக்கும் சூழல்

இலங்கையில் அதிக காடுகள் அழிக்கப்படுகிறது என சூழல் பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சூழல் பாதுகாப்பு மத்திய அமைப்பின் தலைவர் ஹேமந்த விதானகே இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைந்துள்ள காடுகளில் ஆண்டொன்றுக்கு 8000 ஹெக்டேர் வரை அழிக்கப்பட்டு வருவதாக சூழல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

மீள் குடியேற்ற நடவடிக்கை காரணமாகவும் பெருமளவிலான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை ,புத்தளம், அம்பாறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள காடுகள் கூடுதலான அழிவுகளை சந்தித்துள்ளதாக தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள ஹேமந்த விதானகே அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் புதிய நீர்ப்பாசன திட்டங்களின் நிர்மாண பணிகள் காரணமாக பெருமளவிலான காடுகள் சேதப்படுத்தப்படுகிறது என குறிப்பிட்டார்.

இலங்கையின் காடுகளை பேணிப்பாதுகாக்க அரசாங்கம் முயற்சி எடுத்து வருகிறது.150650 ஹெக்டேர் பூமியில் புதிதாக காடுகளை உருவாக்கவும், தற்போது கைவிடப்பட்டுள்ள அரச காணிகளை இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியுமென்றும் நம்பப்படுகிறது.

2022 -ஆம் ஆண்டு 32 % வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஹேமந்த விதானகே தெரிவித்துள்ளார்.

இயற்கையை பாதுகாத்து எம் வருங்கால சந்ததிக்கு அழகான இலங்கையை ஒப்படைப்போம்.

347 total views, 1 views today