வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்து பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்

May 19, 2017 Comments Off on வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்து பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்
வடக்கு மாகாண அபிவிருத்தி குறித்து பிரதமர் தலைமையில் விசேட கூட்டம்

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடும் வகையிலான விசேட சந்திப்பொன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்று வருகிறது.

பிரதமரினால் அறிமுகம் செய்யப்பட்ட பலம் மிக்கதோர் இலங்கை, திட்டமிட்டதோர் பயணம் எனும் தொனிப்பொருளிலான பொருளாதார திட்டத்தின் கீழ் மேற்படி சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த அபிவிருத்தி கூட்டத்தில் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாநகர சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள் என பலரும் கலந்துக் கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் பத்து வருடங்களுக்குள் அனைவரும் பயன்பெறும் வகையிலான புதிய பொருளாதாரத் திட்டம் ஊடாக நாட்டை கட்டியெழுப்பும் முயற்சியாக பிரதமரின் இத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

274 total views, 2 views today