கிளிநொச்சியில் விஷேட சோதனை நடவடிக்கை..

May 19, 2017 Comments Off on கிளிநொச்சியில் விஷேட சோதனை நடவடிக்கை..
கிளிநொச்சியில் விஷேட சோதனை நடவடிக்கை..

கிளிநொச்சி – கச்சார்வெளி பிரதேசத்தில் காவற்துறை மோட்டார் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர்களை தேடி இன்று அதிகாலை முதல் இராணுவத்தினரால் விஷேட சோதனை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர்கள் தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் கிடைக்காத நிலையில், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட துப்பாக்கியின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட பாகங்களை வைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பளை காவற்துறை தெரிவித்துள்ளது.

இராணுவத்தின் விஷேட படையுடன், காவற்துறை விஷேட படைப் பிரிவும் இணைந்து இந்த சோதனை நடடிக்கையில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

457 total views, 2 views today