யோஷிதவிற்கு தொடரும் சிக்கல்

May 19, 2017 Comments Off on யோஷிதவிற்கு தொடரும் சிக்கல்
யோஷிதவிற்கு தொடரும் சிக்கல்

வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு யோஷித ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள கோரிக்கை மனுவை எதிர்வரும் எதிர்வரும் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சிகிச்சை பெறுவதற்காக இரண்டு மாத காலத்திற்கு அவுஸ்திரேலியா செல்ல வேண்டி இருப்பதால் வெளிநாடு செல்வதற்கான தடையை நீக்குமாறு யோஷித ராஜபக்ஷவின் சட்டத்தரணி நீதிமன்றத்தை கோரியுள்ளார்.

குறித்த கோரிக்கை தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெற்று விளக்கமளிப்பதற்கு காலம் வழங்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி கேட்டுக் கொண்டதற்கிணங்கஇ வழக்கு எதிர்வரும் 23ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நிதி மோசடி குற்றச்சாட்டில் பிணை வழங்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1,684 total views, 3 views today