மகிந்தவின் தொடர்பு நான்கு அமைச்சர்கள் எதிர்காலம் அந்தரத்தில்

May 19, 2017 Comments Off on மகிந்தவின் தொடர்பு நான்கு அமைச்சர்கள் எதிர்காலம் அந்தரத்தில்
மகிந்தவின் தொடர்பு நான்கு அமைச்சர்கள் எதிர்காலம் அந்தரத்தில்

நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் அமைச்சரவை மாற்றத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மின்வலுத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, கனிய எண்ணெய் வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி, நீர்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோருககு பதவிகள் கிடைக்காமல் போகலாம் என கூறப்படுகிறது.

இந்த அமைச்சர்களில் ஒருவர் அமைச்சரவையில் இருந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அரசாங்கத்தின் சகல தகவல்களையும் வழங்கி வருவதாக அரச புலனாய்வு சேவையும் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த அமைச்சர் தொடர்பாக ஜனாதிபதி கடும் வெறுப்பிலும் கோபத்திலும் இருப்பதாக சுதந்திரக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

தமது பதவிகளில் திறம்பட செயற்பட முடியாத காரணத்தினால் ஏனைய அமைச்சர்கள் பதவிகளை இழக்க உள்ளதாக பேசப்படுகிறது.

இவர்களுக்கு பதிலாக எஸ்.பி. திஸாநாயக்க, சரத் அமுனுகம, டிலான் பெரேரா, திலங்க சுமதிபால ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியினர் வகித்து வரும் பதவிகளில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

984 total views, 2 views today