லண்டன் தீ விபத்தின் திகில் நிமிடங்கள்!

June 19, 2017 Comments Off on லண்டன் தீ விபத்தின் திகில் நிமிடங்கள்!
லண்டன் தீ விபத்தின் திகில் நிமிடங்கள்!

அண்மையில், மேற்கு லண்டன் பகுதியில் தொடர் மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்தின் போது குறித்த தொடர் மாடிகுடியிருப்பில் இருந்த சிலர் தப்பியிருந்த போதிலும், பலரும் கட்டடத்தின் உள் சிக்கிக்கொண்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து இடம்பெற்ற தினத்தில் என்ன நடந்தது என்பதை சர்வதேச ஊடகம் ஒன்று புகைப்படங்களுடன் விளக்கியுள்ளது.

மிக விரைவில் கட்டடத்தை ஆக்கிரமித்த தீப்பிழம்புகள்

கடந்த 14ஆம் திகதி அதிகாலை 01.00 மணியளவில் மேற்கு லண்டன் Latimer Road வீதியில் உள்ள Blaze engulfs தொடர் மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அடுத்து அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

தீ முதலில் நான்காவது மாடியிலிருந்து ஆரம்பித்து பின்னர் வேகமாக பரவியதாக நம்பப்படுகிறது. இந்நிலையில், 24 மணித்தியாளங்கள் கடந்தும் மறு நாள் அதிகாலை 01.14 மணி வரை தீ கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

கட்டடத்திற்கு கடும் சேதங்களை உண்டாக்கிய தீ

மேற்கு லண்டனில் சுமார் 1,000 வீடுகளை கொண்டுள்ள ஒரு சமூக வீட்டு வளாகமான லங்காஸ்டர் வெஸ்ட் எஸ்டேட்டின் பகுதியான இந்த கிரென்ஃபெல் டவர் தீ விபத்தால் கடுமையாக சேதமடைந்தது.

கட்டடம் முழுமையாக தீ எரிந்துள்ளது. சடலங்களை தேடும் பணியில் அவசர சேவை பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும், தீ விபத்தின் பின்விளைவு மிகவும் பேரழிவாக இருந்ததால் விபத்தில் பலியான சிலரை அடையாளம் காண முடியாதுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சுவர் ஒன்றில் கைப்பட எழுதப்பட்ட அஞ்சலிகளை பொதுமக்கள் வைத்து செல்கின்றனர்.

தீ விபத்து குறித்து ஒரு முழு பொது விசாரணைக்கு அந்நாட்டு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். குற்றவியல் விசாரணை ஒன்றையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

654 total views, 2 views today