மட்டக்களப்பு சாப்பாட்டுக் கடை சாப்பாட்டினுள் தங்கமோதிரம்???

June 19, 2017 Comments Off on மட்டக்களப்பு சாப்பாட்டுக் கடை சாப்பாட்டினுள் தங்கமோதிரம்???
மட்டக்களப்பு சாப்பாட்டுக் கடை சாப்பாட்டினுள் தங்கமோதிரம்???

காத்தான்குடி உணவகங்களின் கறிரொட்டியினுள் பீடிக்குரை ,இரும்பு ஆணி பல வாடிக்கையாளர் பெற்றநிலையில் இவர்களுக்கு தாமும் சளைத்தவர்களில்லை என்பதை நிறுபிக்க மட்டக்களப்பு நகரில் இன்று பரவலாக கடைபூட்டப்பட்ட நிலையில் சன்சைன் கோட்டலில் உணவருந்த சென்றவருக்கு தங்கமோதிரம் பற்றிசினுள் கிடைத்துள்ளது.

இது பற்றி முகநூல் நண்பர் Ravi Anton இடம் உரிய ஆதாரங்களை அல்லது முகநூலினூடா தொடர்பை ஏற்படுத்தி மோதிரத்தை பெற்று செல்லுமாறும் அவர் தரும் மேலதிக தகவல் பின்வருமாறு!

பற்றீஸ்னுள் தங்க மோதிரம்:-

இன்று காலை(18/06/2017) “சன் சைன்” பேக்கரியில் வாங்கப்பட்ட பற்றீஸ் ஒன்றினுள் தங்க மோதிரம் ஒன்று இருந்ததை அவதானிக்க முடிந்தது.

உரியவர்கள் உரிய ஆவணத்தை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளவும்.

3,828 total views, 1 views today