யாழ் மக்களை இராணுவத்தில் இணையுமாறு தூண்டிய இராணுவத் தளபதி

Report
13Shares

இராணுவ வேலையும் ஒரு அரச வேலை தான். எனவே வடக்கு இளைஞர்களும் இராணுவத்தில் இணைந்து நாட்டுக்குச் சேவையாற்ற முன் வரவேண்டும்.

யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைதளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராட்சி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சிங்கள டிப்ளோமா கற்கைநெறியைப் பூர்த்தி செய்த 600 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

அதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதனை தெரிவித்தார்

அவர் மேலும் உரையாற்றுகையில்

வடக்கு மக்கள் மிகவும் புத்திசாலிகள், மிகவும் நல்லவர்கள். கடந்த 30 வருடப் போர் வடக்கு மக்களையும் தெற்கு மக்களையும் சற்று பிரித்து விட்டது.

இருப்பினும் தெற்கு சிங்கள மக்கள் வடக்கு தமிழ் மக்கள் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டவர்களாக உள்ளனர்.

30 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் வடக்கில் மின்சாரம் இல்லாத நிலையில் கூட வடக்கிலிருந்து சிறந்த மருத்துவர்கள், பொறியியலாளர்கள் உருவாகியிருந்தார்கள்.

எனவே தற்போதைய இளைஞர், யுவதிகள் இராணுவத்தை சிங்கள இராணுவம் என்று எண்ணாதீர்கள். இதுவும் ஒரு அரச வேலை தான். எனவே நீங்களும் இராணுவத்தில் இணைந்துகொள்ளுங்கள் என உரையாற்றியுள்ளார்.

792 total views